உலகம் ஆல்பம்:

29-Dec-2012
1 / 10
மியான்மரின் யங்கூனில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற எதிர்கட்சித் தலைவர் ஆங் சான் சூச்சி.
2 / 10
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பல்பொருள் அங்காடி ஒன்றை பார்வையிட்ட அதிபர் பிரான்கோய்ஸ் ஹாலன்டே.
3 / 10
அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் ஹவாய் தீவில் கிறிஸ்துமஸ் விடுமுறையை கழிக்க வந்த அதிபர் பாரக் ஒபாமா, விடுமுறையை ரத்து செய்துவிட்டு அவசரமாக தலைநகர் வாஷிங்டனுக்கு புறப்பட்டார்.
4 / 10
ரஷ்யாவின் மாஸ்கோவில் நடைபெற்ற ஆண்டின் இறுதி கேபினட் கூட்டத்தில் பங்கேற்ற அதிபர் விளாடிமிர் புடின், பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ்.
5 / 10
மியான்மரின் நைய்பிடவ் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அதிபர் தேய்ன் செய்ன்.
6 / 10
ஜப்பான் டோக்யோ, பார்லிமென்டில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தமது கட்சி உறுப்பினருக்கு கைதட்டி பாராட்டும் புதிய பிரதமர் ஷின்சோ ஆப்.
7 / 10
சீன தலைநகர் பீஜிங் வந்த ஐ.நா. சபையின் 67வது கூட்டத் தொடருக்கான தலைவர் வுக் ஜெரிமிக்கை வரவேற்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஜி ஜிங்பிங்.
8 / 10
பாகிஸ்தானின் நவ்தேரோவில் நடைபெற்ற முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோவின் ஐந்தாவது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரது கணவரும் தற்போதைய அதிபருமான ஆசிப் அலி சர்தாரி, அவரது மகன் பிலாவல் புட்டோ.
9 / 10
செர்பியாவின் பன்சா லுகா நகருக்கு வந்த போஸ்னியா அதிபர் மிலரோட் டோடிக்கை வரவேற்கும் அதிபர் இவிகா டாசிக்.
10 / 10
செனகலின் தாகர் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் அப்துல் முபாயா.