உலகம் ஆல்பம்:

09-Jan-2013
1 / 10
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள அதிபர் மாளிகையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அந்நாட்டு அதிபர் பிராங்கோயிஸ் ஹோலாண்டே பேசினார்.
2 / 10
அமெரிக்க உளவுத்துறை (சி.ஐ.ஏ.) தலைவர் ஜான் பெர்னான், ராணுவ அமைச்சர் செக்ஹேஜெல் ஆகியோர் வாஷிங்டனில் பதவியேற்றனர்.இந்நிகழ்ச்சியில் அதிபர் ஒபாமா கலந்து கொண்டு பேசினார்.
3 / 10
ஜப்பான் ஒலிம்பிக் கமிட்டியைச்சேர்ந்த நிர்வாகிகள்,டோக்கியோவில் அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபேயை சந்தித்து பேசினர்.
4 / 10
கம்போடியாவில் கெமர்ரூச் ஆட்சி வீழ்ந்ததன் 34-ம் ஆண்டு தினத்தையொட்டி நம்பென் நகரில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் ஹூன்சென், தேசிய அசெம்பிளி தலைவர் ஹெங்க்சம்ரின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
5 / 10
சீனா வந்திருந்த பிரான்ஸ் நிதி அமைசசர் பெய்ரிமுஸ்கோவிக் (இடது), அந்நாட்டு துணை பிரதமர் லீ-கியாங்கை, பீய்ஜிங்கில் சந்தித்து பேசினார்.
6 / 10
காங்கோ வந்திருந்த மத்திய ஆப்ரிக்க குடியரசு நாடுகள் அமைப்பின் தலைவர் பிராங்கோயிஸ் பவுசிசி (இடது) அந்நாட்டு அதிபர் டெனிஸ்சாஸூ நெளகோசியாவை, பிரசாவெய்லி நகரில் சந்தித்து பேசினார்.
7 / 10
சிரியாவில் நடந்து வரும் கிளர்ச்சி குறித்து தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உயரதிகாரிகள் கூட்டத்தில் பேசுகிறார் அதிபர் பசார் அல் அசாத்.
8 / 10
சீனா சென்றிருந்த ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் தலைவர் நில்கோவ் பெட்ராஷ்வேயை, தலைநகர் பீ்ய்ஜிங் அரசு மாளிகையில் வரவேற்கிறார் அந்நாட்டு சீன கம்யூனிஸ்ட் மத்திய கமிட்டி பொதுச்செயலர் ஜி-ஜிங்பிங்க்.
9 / 10
கனடா வந்திருந்த பெனின் நாட்டு அதிபர் தாமஸ்பவுனி யாயியை, ஓட்டேவா நகரில் அரசு மாளிகையில் வரவேற்றார் அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் ஹார்பர்.
10 / 10
மாண்டிநிக்ரோ வந்திருந்த பிரான்ஸ் நாட்டு முன்னணி நடிகர் ஜெரார்டு டிப்ராய்டுவை (இடது ) ,அந்நாட்டு பிரதமர் மைலோ-ஜோக்கோவினிக், போட்கோரிகா நகரில் வரவேற்றார்.
Advertisement