உலகம் ஆல்பம்:

30-Jan-2013
1 / 14
பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் நடைபெற்ற மேயர்கள் கூட்டத்தில் உரையாற்றிய அதிபர் தில்மா ரூசெப்.
2 / 14
ஆஸ்திரேலியாவின் கான்பெரா நகரில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணிகள் மோதும் ஒரு நாள் போட்டி நடைபெற்றது. போட்டிக்கு முன்பாக இரு அணி வீரர்களையும் பிரதமர் ஜூலியா கில்லார்டு சந்தித்து பேசினார். அருகில் ஆஸி., பிரதமர் லெவன் கேப்டன் பாண்டிங், வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டேரன் சம்மி.
3 / 14
அமெரிக்காவின் என்.பி.ஏ., சாம்பியன்ஷிப் பட்டத்தை மியாமி ஹீட் அணி கைப்பற்றியது. வெற்றி பெற்ற அணியினருக்கு வாஷிங்டன், வெள்ளை மாளிகையில் விருந்து அளிக்கப்பட்டது. விருந்து நிகழ்ச்சியில் அதிபர் ஒபாமாவுக்கு அணியின் ஜெர்சி வழங்கப்பட்டது.
4 / 14
தென் கொரியாவின் சியோல் நகருக்கு வந்துள்ள மியான்மர் எதிர்கட்சித் தலைவர் ஆங் சான் சூச்சிக்கு அந்நாட்டின் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள பார்க் கியுன் ஹை உற்சாக வரவேற்பளித்தார்.
5 / 14
டோக்யோ பார்லிமென்டிலுள்ள மக்களவையில் கேபினட் கூட்டத்தில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகள் குறித்து ஜப்பான் பிரதமர் ஷின்சோ ஆபே உரையாற்றினார்.
6 / 14
கரீபியன் மற்றும் லத்தின் அமெரிக்க நாடுகளின் மாநாடு சிலியன் சான் டியாகோ நகரில் நடைபெற்றது. இக்கூட்டமைப்பு தலைவராக கியூபாவின் ராவுல் காஸ்ட்ரோ தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதிய தலைவர் ராவுல் காஸ்ட்ரோவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் சிலி அதிபர் செபஸ்டியன் பெனரா (வலது).
7 / 14
உருகுவேயின் மான்டிவீடியோ நகரில் நடைபெற்ற கூட்டு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அந்நாட்டு அதிபர் ஜோஸ் முஜிகா, மெக்ஸிகோ அதிபர் என்ரிக் பெனா நியடோ.
8 / 14
வட கொரியாவின் பியாங்யாங் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அந்நாட்டு தலைவர் கிம் ஜாங் அன்.
9 / 14
கவுதிமாலாவில் சர்வாதிகாரியாக இருந்த போது நடைபெற்ற உள்நாட்டு போர் தொடர்பான வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜராக வந்த ஜோஸ் எப்ரெய்ன் ரியாஸ் மான்ட்.
10 / 14
எகிப்து தலைநகர் கெய்ரோவில் அந்நாட்டு அதிபர் முகமது மோர்சியை சந்தித்த பேசிய பிரதமர் ஹெசாம் கன்டில் (இடது).
11 / 14
ஜெர்மனியின் பெர்லினில் நடைபெற்ற கார்னிவெல் கிளப் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற சான்சிலர் ஏஞ்சலா மெர்கல்.
12 / 14
இஸ்லாமாபாத் வந்துள்ள ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் நவீத் ஓமரை வரவேற்கும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் பிஸ்மில்லா கான் முகமதி (வலது).
13 / 14
ரஷ்யாவின் கிரம்ளினில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற அதிபர் விளாடிமிர் புடின் (நடுவில்), பாதுகாப்பு அமைச்சர் செர்கி சோய்கூ (இடது), ராணுவ தளபதி வெலரி கெரசிமோவ் (வலது).
14 / 14
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன்.