உலகம் ஆல்பம்:

01-Feb-2013
1 / 10
ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் மன்னர் ஜூவன் கார்லோசை சந்தித்து பேசிய காடலோனிய கவர்னர் ஆர்தர் மஸ் (வலது).
2 / 10
ஜெர்மனியின் பெர்லின் நகருக்கு வந்துள்ள இத்தாலிய பிரதமர் மரியோ மான்டியை வரவேற்கும் சான்சிலர் ஏஞ்சலா மெர்கல்.
3 / 10
அல்ஜீரியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், அல்ஜீயர்ஸ் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார். அருகில் அல்ஜீரிய அதிபர் அப்தலசிஸ் பவுட்டிபில்கா.
4 / 10
தென் கொரியாவில் 1980ம் ஆண்டு நடைபெற்ற குவான்ஜூ புரட்சியாளர்களின் நினைவிடம் சியோலில் உள்ளது. நினைவிடத்துக்கு வந்த மியான்மர் எதிர்கட்சித் தலைவர் ஆங் சான் சூச்சிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
5 / 10
ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்க வந்த அதிபர் விளாடிமிர் புடின், பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ் (இடது).
6 / 10
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன்னில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன். அருகில் மெக்ஸிகோ வெளியுறவுத் துறை செயலர் ஜோஸ் அன்டோனியோ.
7 / 10
ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் நடைபெற்ற கூட்டத்தின் போது உரையாடிய ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஜோஸ் மானுவேல் பரோஸா, ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வாஸ்னேக்கர்.
8 / 10
கியூபாவின் ஹவன்னா நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரேசில் முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா.
9 / 10
இஸ்ரேலின் ஜெருசலம் நகரில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அதிபர் சைமன் பெரேஸ்.
10 / 10
தெற்கு சீன பகுதியில் உள்ள தீவுகள் தொடர்பாக சீனாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பதட்டமான சூழ்நிலை குறித்து தைபேயில் பேசிய தைவான் அதிபர் மா யிங் ஜோவ்.
Advertisement