உலகம் ஆல்பம்:

07-Feb-2013
1 / 14
அமெரிக்காவின் போஸ்டன் நகரில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட முன்னாள் துணை அதிபர் அல் கோர்.
2 / 14
பராகுவே அதிபர் தேர்தல் வேட்பாளர் லினோ ஒவிடோ ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார். அவரது இறுதிச்சடங்கு விழாவில் பங்கேற்க வந்த அவரது மகள் பேபியாலோ ஒவிடோவுக்கு மக்கள் ஆறுதல் கூறினர்.
3 / 14
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அதிபர் பாரக் ஒபாமா.
4 / 14
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் வந்த பெனின் அதிபர் தாமஸ் போனி யாயியை வரவேற்கும் பிரான்ஸ் அதிபர் பிரான்கோய்ஸ் ஹாலன்டே (இடது).
5 / 14
ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடைபெற்ற வாரந்திர கேபினட் கூட்டத்தில் பங்கேற்ற சான்சிலர் ஏஞ்சலா மெர்கல், துணை சான்சிலர் பிலிப் ரோஸ்லர்.
6 / 14
ஜெர்மனியின் பெர்லினில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இசை அமைப்பாளர் டேனியல் பேரன் போயமிற்கு ஆர்டர் ஆப் மெரிட் விருது வழங்கிய அதிபர் ஜோஜிம் காவுக்.
7 / 14
இஸ்ரேலின் ஜெருசலம் பார்லிமென்டில் புதிதாக தேர்வான உறுப்பினர்கள் பதவியேற்று கொண்டனர். இதற்கான நிகழ்ச்சியில் பிரதமர் பெஞ்சமின் நெடயன்கூ பங்கேற்றார்.
8 / 14
ரஷ்யாவின் சோச்சி நகரில் அடுத்த ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. ஸ்கை ஜம்பிங் மைதானத்தை பார்வையிட்ட அதிபர் விளாடிமிர் புடின்.
9 / 14
பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட அதிபர் டில்மா ரூசெப்.
10 / 14
வாடிகன் நகரில் நடைபெற்ற வாரந்திர பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்று ஆசி வழங்கிய போப் 16ம் பெனிடிக்ட்.
11 / 14
எகிப்தின் கெய்ரோவில் உள்ள இமாம் ஹூசைன் மசூதியில் வழிபாடு நடத்திய பின்னர் ஆதரவாளர்களை நோக்கி கையசைக்கும் ஈரான் அதிபர் மகமது அகமதிநிஜாத்.
12 / 14
எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற அதிபர் முகமது மோர்சி (இடது), வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது கமலுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
13 / 14
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் லியோன் பனெட்டா.
14 / 14
பால்க்லாந்து தீவு விவகாரம் தொடர்பாக இங்கிலாந்தின் லண்டனில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய அர்ஜென்டின வெளியுறவுத் துறை அமைச்சர் ஹெக்டர் டிமர்மென்.
Advertisement