உலகம் ஆல்பம்:

08-Feb-2013
1 / 15
ஜெர்மனி, பிரான்ஸ் அணிகள் மோதும் நட்பு ரீதியிலான் கால்பந்து போட்டி பாரிசில் நடைபெற்றது. போட்டியை காண வந்த ஜெர்மன் சான்சிலர் ஏஞ்சலா மெர்கலை வரவேற்று அழைத்து செல்லும் பிரான்ஸ் அதிபர் பிரான்கோய்ஸ் ஹாலன்டே.
2 / 15
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன்னில் உள்ள வெள்ளை மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அதிபர் பாரக் ஒபாமா.
3 / 15
ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ்.
4 / 15
தேர்தல் ஆணையம் தொடர்பாக பாகிஸ்தானின் சுப்ரீம் கோர்ட் தொடர்ந்த வழக்கில் பங்கேற்க வந்த மத குரு தாகிர் உல் கத்ரி.
5 / 15
ஜப்பான் தலைநகர் டோக்யோவில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் ஷின்சோ ஆபே.
6 / 15
பெல்ஜியத்தின் ப்ரூசெல்ஸ் நகரில் நடைபெற்ற ஐரோப்பிய யூனியன் பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்க வந்த இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.
7 / 15
கம்போடியாவின் நாம் பென் நகரிலுள்ள மன்னர் நோரடோம் ஷினோக்கின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பும் தற்போதைய மன்னர் நோரடோம் ஷிகமோனி.
8 / 15
அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தின் லீஸ்பர்க் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய துணை அதிபர் ஜோ பிடேன்.
9 / 15
அமெரிக்காவின் 68வது வெளியுறவுத் துறை அமைச்சராக ஜான் கெர்ரி பதவியேற்றுக் கொண்டார். விழாவில் மனைவி தெரசா கெர்ரியுடன் பங்கேற்ற ஜான் கெர்ரி.
10 / 15
எகிப்தின் கெய்ரோவில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனை நடத்திய அதிபர் முகமது மோர்சி.
11 / 15
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவுக்கு வந்த ஜெர்மன் வெளியுறவுத் துறை அமைச்சர் கியுடோ வெஸ்டர்விலேவை வரவேற்கும் பிலிப்பைன்ஸ் அதிபர் 3ம் பெனிக்னோ அகியுனோ.
12 / 15
பெல்ஜியத்தின் ப்ரூசெல்ஸ் நகரில் நடைபெற்ற ஐரோப்பிய யூனியன் பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்க வந்த நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்.
13 / 15
அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்தவர்கள் கல்வி உள்ளிட்ட பல்வேறு உரிமைகளை வலியுறுத்தி வாஷிங்டன் மாகாணத்தின் ஒலிம்பியாவில் பேரணி நடத்தினர். பேரணியில் பங்கேற்ற வாஷிங்டன் கவர்னர் ஜெ இன்ஸ்லே.
14 / 15
அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற பாதுகாப்பு துறை அமைச்சர் லியோன் பனெட்டா.
15 / 15
ரஷ்யாவின் சோச்சி நகரில் அடுத்த ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இதற்கான ஓராண்டு கவுன்டவுனை மாஸ்கோ மேயர் செர்கி சோப்யானின் துவக்கி வைத்தார்.
Advertisement