உலகம் ஆல்பம்:

21-Feb-2013
1 / 11
அரசுமுறைப் பயணமாக பிரேசில் வந்துள்ள ரஷ்ய பிரதமர் டிமிட்ரி மெத்வதேவிற்கு, தலைநகர் பிரேசிலியாவில் உள்ள அதிபர் மாளிகையில் உற்சாகமாக வரவேற்கும் பிரேசில் அதிபர் டில்மா ரௌசெப்.
2 / 11
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், அரபு லீக் அமைப்பின் பொதுச்செயலாளர் நபில் எலாரபி கலந்துகொண்டார்.
3 / 11
ஸ்பெயின் பார்லிமென்டில் நிகழ்ந்த விவாதத்தில் கலந்துகொண்ட பிரதமர் மரியானோ ரஜோய்.
4 / 11
டுனிஷியாவில் அரசியல் நெருக்கடி காரணமாக, பிரதமர் ஹமாதி ஜெபாலி தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், நாட்டின் முன்னணி கட்சியான மாடரேட் இஸ்லாமிஸ்ட் கட்சி தலைவர் ரசெட் கான்நவுச்சி (இடது), அதிபர் மாளிகையில் அதிபர் மான்செப் மர்ஜௌகியை சந்தித்துப் பேசியுள்ளது அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
5 / 11
போப் 16ம் பெனடிக்ட், இம்மாத இறுதியில் ராஜினாமா செய்யப்பட உள்ளார். தனது ஓய்வுக்காலத்தில், கோடைகாலத்தை கழிக்கும் பொருட்டு, ரோமின் தெற்கு பகுதியில் உள்ள கேஸ்டல் கண்டோல்பா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உறைவிடம்.
6 / 11
கம்போடியா முன்னாள் அரசர் நோரோடோம் ஷிஹனௌக்கின் சிலை விரைவில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக தலைநகர் பினோம் பென்னில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் சிறப்பு பூஜைகளை மேற்கொள்ளும் கம்போடிய பிரதமர் மற்றும் துணை பிரதமர்.
7 / 11
இத்தாலியில் இன்னும் சில தினங்களில் பொதுத்தேர்தல் நடைபெற .உள்ள நிலையில், தலைநகர் ரோமில் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முன்னாள் பிரதமர் சில்வியா பெர்லஸ்கோனி.
8 / 11
அரசுமுறைப்பயணமாக துருக்கி வந்துள்ள லிபியா பிரதமர் அலி ஜைடானுக்கு (இடது), அங்காரா நகரில் உற்சாக ராணுவ வரவேற்பு வழங்கப்பட்டது. அருகில் துருக்கி பிரதமர் ரெசெப் தய்யீப் எர்டாகன்.
9 / 11
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்று விட்டு திரும்பும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜீன் ஒய்வ்ஸ் லீ டிரியான்.
10 / 11
ஈரானில் புத்த சிலைகள் சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து, இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள ஈரான் தூதரகம் முன் புத்த மதத்துறவிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
11 / 11
ஐரோப்பிய நாடான கிரீஸ் நாட்டில், பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, கடும் சிக்கன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, தொழிற்சங்கத்தினர், ஏதென்ஸ் நகரில், நேற்று கண்டன ஊர்வலம் நடத்தினர்.
Advertisement