உலகம் ஆல்பம்:

22-Feb-2013
1 / 10
ஜெர்மன் தலைநகர் பெடரல் பார்லிமென்டில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு வருகை தரும் சாஞ்சலர் ஏஞ்சலா மெர்கெல்.
2 / 10
ரஷ்ய சுப்ரீம் கோர்ட்டின் 90ம் ஆண்டு நிறைவுவிழாவையொட்டி, தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிபர் விளாடிமிர் புடின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அருகில் உரையாற்றும் சுப்ரீம் கோர்ட் தலைவர் வியாசெஸ்லாவ் லெபிடேவ்.
3 / 10
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற்ற சர்வதேச அமைதி தொடர்பான நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத்துறை செயலர் ரஞ்சன் மாத்தாய் சிறப்புரையாற்றினார்.
4 / 10
பிரான்ஸ் வந்துள்ள உலக பொருளாதார அமைப்பின் தலைவரும் மற்றும் நிறுவனருமான க்ளாஸ் ஸ்வாப், தலைநகர் பாரீசில், அதிபர் பிரான்காய்ஸ் ஹாலண்டேவை சந்தித்துவிட்டு வெளியேறும் காட்சி.
5 / 10
அரசுமுறைப்பயணமாக லெபனான் வந்துள்ள பிரிட்டன் வெளியுறவுத்துறை செயலர் வில்லியம் ஹேக் (இடது), அதிபர் மாளிகையில் அதிபர் மிச்செல் சுலெய்ன்மானை சந்தித்துப் பேசினார்.
6 / 10
பெல்ஜியம் தலைநகர் புரூசல்சில் நேட்டோ தலைமையகத்தில் நடைபெற்ற நேட்டோ பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லியோன் பெனட்டா, பிரிட்டன் பாதுகாப்புத்துறை செயலர் பிலிப் ஹேமண்ட் கலந்துகொண்டனர்.
7 / 10
வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், தனது குழந்தையுடன் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டக்காரர்.
8 / 10
காதலியைக் கொன்ற ஒலிம்பிக் தடகள வீரர் ஆஸ்கர் பிஸ்டோரிஸ் வழக்கு விசாரணை, தென்ஆப்ரிக்காவின் பிரிட்டோரியா கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதில் பிஸ்டோரியசின் தந்தை மற்றும் மகள் கலந்துகொண்டனர்.
9 / 10
இங்கிலாந்தின் லண்டன் மருத்துவமைனயில் சிகிச்சை பெற்று வரும் வேல்ஸ் மாகாணத்தின் இளவரசரின் குழந்தையை, பிரிட்டன் இளவரசர் சார்லஸ் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.
10 / 10
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள வணிகவளாகத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.பலர் படுகாயமடைந்தனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.