உலகம் ஆல்பம்:

05-Mar-2013
1 / 10
வங்கதேசத்தின் தாகா நகரிலுள்ள மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ள வங்கதேசத்தின் முதல் அதிபர் ஷேக் முஜிபூர் ரஹ்மான், முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி ஆகியோர் எடுத்துக் கொண்ட அரிய புகைப்படத்தை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பார்வையிட்டார்.
2 / 10
மெக்சிகோ நாட்டில் பொதுத்துறை வசமுள்ள எண்ணெய் நிறுவனங்களில் தனியார் முதலீடு மேற்கொள்வது குறித்த தீர்மானத்துக்கு ஆளுங்கட்சியின் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மெக்சிகோ சிட்டியில் நடைபெற்ற இது தொடர்பான கூட்டத்தில் பங்கேற்ற அதிபர் என்ரிக் பெனா நியடோ.
3 / 10
தென் கொரியாவின் சியோல் நகரிலுள்ள பார்லிமென்டில் உரையாற்றிய பின்னர் பங்கேற்றவர்களுக்கு வணக்கம் தெரிவிக்கும் அதிபர் பார்க் கியுன் ஹை.
4 / 10
ஜெர்மன் அதிபர் ஜோஜிம் காவுக் (வலது) மற்றும் அவரது துணைவியார் டேனியலா ஸ்காட் (இடது) இந்தோனேசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். ஜகார்த்தா நகரில் அவர்களுக்கு இந்தோனேசிய அதிபர் சுஷிலே பாம்பங் யுதோயானோ மற்றும் அவரது மனைவி உற்சாக வரவேற்பளித்தனர்.
5 / 10
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அதிபர் 3ம் பெனிக்னோ அகியுனோ.
6 / 10
கொசாவாவின் பிரிஸ்டினா நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட அதிபர் அடிபெடே ஜக்ஜகா.
7 / 10
ஆஸ்திரியாவின் வியன்னா நகருக்கு வந்த மியான்மர் அதிபர் தேய்ன் செய்னுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. உடன் மியான்மர் அதிபர் ஹெய்ன்ஸ் பிஸ்செர்.
8 / 10
சீனாவின் பீஜிங்கில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட மக்கள் தேசிய காங்கிரசின் செய்தித் தொடர்பாளர் பு யிங்.
9 / 10
துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு வந்துள்ள கிரீஸ் பிரதமர் ஆன்டோனிஸ் சாமரோசை உற்சாகமாக வரவேற்கும் துருக்கி பிரதமர் ரெசப் தய்யிப் எர்டோகன் (வலது).
10 / 10
கென்யாவின் நைரோபியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களித்த அதிபர் வேட்பாளர் ஊகுரு கென்யாட்டா.
Advertisement