உலகம் ஆல்பம்:

22-Mar-2013
1 / 10
இஸ்ரேல் சென்றுள்ள அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, ஜெருசலேமில் உள்ள சர்வதேச கன்வென்சன் மையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பார்வையாளர் ஒன்றின் கருத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.
2 / 10
அரசுமுறைப்பயணமாக பாலஸ்தீனம் வந்துள்ள அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, மேற்குகரை நகரமான ரமல்லாவில் பாரம்பரிய நடனத்தை கண்டுகளித்தார். அருகில் பாலஸ்தீன பிரதமர் ஷலாம் பயாத்.
3 / 10
அமெரிக்காவின் கேப்பிடல் ஹில்லில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பார்லிமென்ட் சபாநாயகர் ஜான் போய்னர் கலந்துகொண்டார்.
4 / 10
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடைபெற்ற கூட்டத்தில் தனது ஆதரவாளர்களை நோக்கி கையசைக்கும் தலைவர் அயடோல்லா அலி காமினெய்.
5 / 10
அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் ,நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட துணை அதிபர் ஜோ பீடன்.
6 / 10
அரசுமுறைப்பயணமாக ரஷ்யா வந்துள்ள ஐரோப்பிய யூனியன் தலைவர் ஜோஸ் மானுவேல் பரோசா, தலைநகர் மாஸ்கோவில் பிரதமர் டிமிட்ரி மெத்வதேவை சந்தித்துப் பேசினார்.
7 / 10
அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர் வந்துள்ள பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாசென்கோ (வலது), தலைநகர் சிங்கப்பூரில் பிரதமர் லீ ஷியன் லூங்கை சந்தித்துப் பேசினார்.
8 / 10
ஜெர்மனி வந்துள்ள துனிஷியா அதிபர் மோன்செப் மர்ஜௌகிக்கு உற்சாக ராணுவ வரவேற்பு அளிக்கப்பட்டது. அருகில் ஜெர்மன் அதிபர் ஜோச்ஷிம் கவுக்.
9 / 10
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பாலஸ்தீன வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், காசா நகரில் ஒபாமா உருவம் தாங்கிய பதாகைகளை வைத்து போராட்டம் நடத்தி வரும் மக்கள்.
10 / 10
நெதர்லாந்து வந்துள்ள துருக்கி பிரதமர் தய்யீப் எர்டாகனுக்கு தி ஹேக் நகரில் வரவேற்பு அளிக்கும் டச்சு பேரரசி பேட்ரிக்ஸ்.
Advertisement