உலகம் ஆல்பம்:

29-Mar-2013
1 / 10
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டில் உள்ள கதீட்ரல் தேவாலயத்துக்கு சென்று பிரார்த்தனை மேற்கொண்ட பிரிட்டிஷ் ராணி இரண்டாம் எலிசபெத்.
2 / 10
தென் ஆப்ரிக்காவின் டர்பன் நகரில் 5வது பிரிக்ஸ் நாடுகளின் மாநாடு நடைபெற்று வருகிறது. மாநாட்டின் போது நடைபெற்ற பிரிக்ஸ் மற்றும் ஆப்ரிக்க நாடுகள் என்ற கருத்தரங்கில் பேசிவிட்டு திரும்பும் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.
3 / 10
தென் ஆப்ரிக்காவின் டர்பன் நகரில் 5வது பிரிக்ஸ் நாடுகளின் மாநாடு நடைபெற்று வருகிறது. இதற்கான கூட்டத்தில் பங்கேற்ற இந்திய பிரதமர் மன்மோகன் சிங், சீன அதிபர் ஜி ஜிங்பிங் மற்றும் இரு நாட்டு அதிகாரிகள்.
4 / 10
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன்னில் நடைபெற்ற விழாவில் அமெரிக்க சீக்ரெட் சர்வீசின் தலைவராக ஜூலியா பியர்சன் பதவி பெற்றுக்கொண்டார். அதிபர் பாரக் ஒபாமா, துணை அதிபர் ஜோ பிடேன் முன்னிலையில் பதவி பிரமாணம் ஏற்றுக் கொண்ட ஜூலியா.
5 / 10
தென் ஆப்ரிக்காவின் டர்பனில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டுக்கு இடையே எகிப்து அதிபர் முகமது மோர்சியுடன் கலந்துரையாடிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (வலது).
6 / 10
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற பட்ஜெட் அமைச்சர் பெர்னார்டு கேசிநுவே.
7 / 10
கத்தார் தலைநகர் தோகாவில் சிரிய தூதரகத்தை துவக்கி வைக்க வந்த அந்நாட்டு இடைக்கால பிரதமர் ஹசன் கிட்டோ, எதிர்கட்சித் தலைவர் அகமது மோஸ் அல் காதிப்.
8 / 10
பெல்ஜியம் தலைநகர் ப்ரூசெல்ஸ் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாடிய ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஜோஸ் மானுவல் பரோசா.
9 / 10
வாடிகன் நகரில் நடைபெற்ற புனித வியாழன் பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்று ஆசி வழங்கிய போப் முதலாம் பிரான்சிஸ்.
10 / 10
சிலியில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. முன்னாள் அதிபர் மிச்செலி பச்செலட் மீண்டும் தேர்தல் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். தமது ஆதரவாளர்களை நோக்கி கையசைக்கும் மிச்செலி.
Advertisement