உலகம் ஆல்பம்:

08-Apr-2013
1 / 10
பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் தரையிறங்கிய முன்னாள் அதிபர் பர்வெஸ் முஷ்ராப், ஆதரவாளர்களை நோக்கி கையசைத்தார்.
2 / 10
தாய்லாந்தின் யாலா பகுதியில் நடைபெற்ற கலவரத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மருத்துவரை அந்நாட்டு பிரதமர் யிங்லக் சின்வத்ரா நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார்.
3 / 10
ஜெர்மனியின் ஹன்னோவர் நகரில் நடைபெற்ற தொழில் மற்றும் வர்த்தக கண்காட்சியை பார்வையிட வந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை வரவேற்கும் ஜெர்மன் சான்சிலர் ஏஞ்சலா மெர்கல்.
4 / 10
மியான்மரின் யங்கூனில் நடைபெற்ற ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சியின் கூட்டத்தில் பங்கேற்று வருகை பதிவேட்டில் கையெழுத்திட்ட அக்கட்சியின் தலைவர் ஆங் சான் சூச்சி.
5 / 10
நெதர்லாந்தின் தி ஹேக் நகர அரசு மாளிகைக்கு வந்த ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் மற்றும் அவரது மனைவி யு சூன் டேக் ஆகியோரை நெதர்லாந்து ராணி பீட்ரிக்ஸ் (நடுவில்) வரவேற்றார்.
6 / 10
மலேசியாவில் விரைவில் பார்லிமென்ட் தேர்தல் நடைபெற உள்ளது. கோலாலம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளும் தேசிய முன்னணியின் தேர்தல் அறிக்கையை பிரதமர் நஜிப் ரசாக் வெளியிட்டார்.
7 / 10
உக்ரைனின் கீவ் நகரில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற எதிர்கட்சித் தலைவரும், முன்னாள் குத்துச்சண்டை சாம்பியனுமான வைடாலி கிட்ஸ்கோ, ஆதரவாளர்களுக்கு கைகொடுத்து உற்சாகப்படுத்தினார்.
8 / 10
வாடிகன் நகரில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்று ஆசி வழங்கிய போப் முதலாம் பிரான்சிஸ்.
9 / 10
துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரியை வரவேற்று பேசிய பிரதமர் ரெசப் தயிப் எர்டோகன்.
10 / 10
மான்டிநெக்ரோ போட்கோரிகாவிலுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த அதிபர் பிலிப் வுஜோனோவிச்.
Advertisement