உலகம் ஆல்பம்:

15-Apr-2013
1 / 10
ஜப்பானின் டோக்யோ நகருக்கு வந்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, ஜப்பான் வெளியுறவுத் துறை அமைச்சரை நோக்கி உற்சாகமாக கையசைத்தார்.
2 / 10
வெனிசூலாவின் கராகஸ் நகரில் நடைபெற்ற பெலிவியரின் மிலிட்டியாஸ் தின நிகழ்ச்சியில் பங்கேற்ற இடைக்கால அதிபர் நிகோலஸ் மடுரோ.
3 / 10
வெனிசூலாவின் கராகஸ் நகரில் அதிபர் தேர்தலில் வாக்களித்த பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய எதிர்கட்சி வேட்பாளர் ஹென்ரிக் கேப்ரில்ஸ்.
4 / 10
மியான்மரின் நைபிடவ் நகரில் நடைபெற்ற தண்ணீர்த் திருவிழாவில் அதிபர் தேய்ன் செய்ன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் கலந்த கொண்ட பெண்கள் மீது தண்ணீர் தொளிக்கும் தேய்ன் செய்ன்.
5 / 10
சுவிட்சர்லாந்தின் பிரைபோர்க் நகரில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்று பேசிய திபெத்தை சேர்ந்த புத்த மதத் தலைவர் தலாய் லாமா.
6 / 10
நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டேம் நகரில் நடைபெற்ற ஒவியக் கண்காட்சியில் கலந்து கொண்ட அந்நாட்டு ராணி பீட்ரிக்ஸ்.
7 / 10
பராகுவேயின் அசன்சியன் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற லிபரல் கட்சியின் அதிபர் வேட்பாளர் எப்ரய்ன் அலக்ரே (வலது), துணை அதிபர் வேட்பாளர் ரபெல் பிலிசோலா.
8 / 10
எகிப்தின் கெய்ரோவில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாடிய அதிபர் முகமது மோர்சி, சிரியாவுக்கான ஐ.நா. அரபு லீக் தூதர் லக்தர் பிரக்மி.
9 / 10
இத்தாலியின் ரோம் நகரிலுள்ள புனித பவுல் தேவாலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்று ஆசி வழங்கிய போப் முதலாம் பிரான்சிஸ்.
10 / 10
ஜெர்மனியின் ஆஸ்பர்க் நகரில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜெர்மன் சோஷியல் டெமகிரட்டிக் கட்சித் தலைவர் சிக்மர் கேப்ரியல்.
Advertisement