உலகம் ஆல்பம்:

22-Apr-2013
1 / 10
இங்கிலாந்தின் லண்டன் அருகே உள்ள வின்ட்சோர் கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரிட்டிஷ் இளவரசி கேத்தே வில்லியம்ஸ்.
2 / 10
மொனாகோவில் நடைபெற்ற மான்டிகார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டிகளை காண வந்த அந்நாட்டு இளவரசர் ஆல்பர்ட், இளவரசி சார்லின்.
3 / 10
வெனிசூலாவின் கராகஸிலுள்ள ராணுவ அருங்காட்சியகத்தை பார்வையிட்ட அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மடூரோ, அர்ஜென்டினா அதிபர் கிறிஸ்டினா பெர்னாண்டஸ்.
4 / 10
இஸ்ரேலின் ஜெருசலம் நகரில் நடைபெற்ற வாரந்திர கேபினட் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் பெஞ்சமின் நெடயன்கூ.
5 / 10
பராகுவேயின் அஸன்சியன் நகரிலுள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்துவிட்டு திரும்பிய கொலரடோ கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹோரசியோ கார்டஸ்.
6 / 10
ஐவரி கோஸ்ட் நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற்று வருகிறது. அபிஜ்தன் நகரிலுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு வந்த அதிபர் அலாஸ்சான் அவுட்டாரா.
7 / 10
துருக்கியின் இஸ்தான்புல்லில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சர் அகமது டவுடோக்லு.
8 / 10
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய சிரியாவின் எதிர்கட்சித் தலைவர் மோஸ் அல் கதிப்.
9 / 10
வாடிகனில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டு ஆசி வழங்கிய போப் முதலாம் பிரான்சிஸ்.
10 / 10
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன்னில் நடைபெற்ற ஐ.எம்.எப். கூட்டத்தில் பங்கேற்ற அதன் தலைவர் கிறிஸ்டினா லகார்டே.
Advertisement