உலகம் ஆல்பம்:

23-Apr-2013
1 / 10
ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சான்சிலர் ஏஞ்சலா மெர்கல், போலந்து பிரதமர் டோனால்டு டஸ்க் (நடுவில்).
2 / 10
தென் கொரியா வந்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்சை வரவேற்கும் அந்நாட்டு அதிபர் பார்க் கியுன் ஹை.
3 / 10
உடல்நலக் கோளாறு காரணமாக கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்பெயின் மன்னர் ஜூவன் கார்லோஸ், மாட்ரிட்டில் உள்ள ஜார்ஜூலா அரண்மனையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.
4 / 10
செர்பியாவின் பெல்கிரேடிலுள்ள பார்லிமென்ட் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் இவிகா டாசிக்.
5 / 10
பராகுவே அதிபர் தேர்தலில் கொலரடோ கட்சியின் வேட்பாளர் ஹோராசியோ கார்டஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றி மகிழ்ச்சியை ஆதரவாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் கார்டஸ்.
6 / 10
பெல்ஜியத்தின் ப்ரூசெல்ஸ் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று பேசிய அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஜோஸ் மானுவேல் பரோசா (வலது).
7 / 10
சிங்கப்பூர் வந்துள்ள இந்தோனேசியா அதிபர் சுஷிலோ பாம்பங் யுதயானோ மற்றும் அவரது மனைவி கிறிஸ்டியானி ஹெராவதியை வரவேற்ற சிங்கப்பூர் அதிபர் டோனி டான், அவரது மனைவி மேரி சீ.
8 / 10
ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் முன்னாள் அதிபர் விளாடிமிர் லெனின் 143வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. லெனிக்கு அஞ்சலி செலுத்த வந்த ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் கென்னடி ஜூகனவ் மற்றும் ஆதரவாளர்கள்.
9 / 10
சிரியாவின் டமாஸ்கஸ் நகருக்கு வந்துள்ள ஈரான் பார்லிமென்ட் குழு உறுப்பினர்களை வரவேற்கும் அதிபர் பக்ஷர் அஸ்ஸாத்.
10 / 10
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்க வந்த அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஷக் ஹகெல்லுடன் ஆலோசனை மேற்கொள்ளும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் மோஷே யாலுன் (வலது).
Advertisement