புகைப்பட ஆல்பம்:

திருமலை திருப்பதி பிரம்மோற்சவ 3ம் நாள்
1 / 9
பிரம்மோற்சவ விழாவின் ஏழாம் நாளில் சூரியபிரபை வாகனத்தில் மலையப்பசுவாமி வலம்வந்தார்.
2 / 9
திருமலையில் நடந்துவரும் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான்று சுவாமி உலாவரும் மாடவீதிகளி்ல் பல்வேறு மாநில கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.ஆந்திரா மாநில கலைஞரின் தப்பு தாளத்தின் வேகத்திற்கு அவரது தலைமுடியும் ஆடியது.
3 / 9
திருமலையில் நடந்துவரும் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான இன்று சுவாமி யோக நரசிம்மராக வலம் வந்ததால் சிறுவர்கள் பலரும் நரசிம்மர் போல சிம்ம முக பொம்மை அணிந்து வந்தனர்.
4 / 9
மகராஷ்ட்ரா மாநிலத்தில் இருந்து கண்டா என்ற வாத்தியக்கருவியை கொண்டுவந்து வாசித்தனர்.பெரிய தோசைக்கல் போன்ற இரும்பு தகட்டை கட்டி தொங்கவிட்டு அதில் ட்ரம்ஸ் வாசி்ப்பது போல சுத்தியலால் அடித்து வாசித்தார்.இந்த சப்தம் அவரது காதை கெடுத்துவிடக்கூடாது என்பதற்காக இயர்பிளக் கொண்டு அடைத்துக்கொண்டார்.
5 / 9
ராஜஸ்தான் மாநில பெண்கள் தங்களது பராம்பரிய நடனத்தை ஆடியதுடன் அவ்வப்போது தங்களை தாங்களே உற்சாகப்படுத்திக் கொள்ள விசிலடித்துக்கொண்டனர்.
6 / 9
திருமலையில் நடந்துவரும் பிரம்மோற்சவத்தின் போது சுவாமி உலாவரும் மாடவீதிகளி்ல் பல்வேறு மாநில கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.மகராஷ்டிரா மாநில பெண்கள் உயரமான ட்ரம்ஸ்களை வாசித்து பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர்.
7 / 9
திருமலையில் நடந்துவரும் பிரம்மோற்சவத்தின் உற்சவரான மலையப்பசுவாமி வீணை ஏந்திய சரஸ்வதி கோலத்தில் ஊஞ்சலில் எழுந்தளுளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
8 / 9
திருமலையில் நடந்துவரும் பிரம்மோற்சவத்தில் உற்சவரான மலையப்பசுவாமி அன்ன வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
9 / 9
திருமலையில் நடந்துவரும் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான்று உற்சவரான மலையப்பசுவாமி யோக நரசிம்மராக சிம்ம வாகனத்தில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.