புகைப்பட ஆல்பம்:

திருப்பதி பிரம்மோற்சவ 4- 5 ம் நாள் விழா
1 / 8
திருமலை பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளில் உற்சவர் மலையப்பசுவாமி ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் மாலை மற்றும் கிளியுடன் மோகினி அவதாரத்தில் தங்க பல்லக்கில் எழுந்தருளினார்.
2 / 8
திருப்பதியில் மலையப்பசுவாமி ஆண்டாள் மாலை அணிந்துவந்ததன் காரணமாக பக்தர்கள் ஆண்டாள் போல வேடமணிந்து ஆடியபடி வந்தனர்.
3 / 8
திருமலை திருப்பதி பிரம்மோற்சவத்தின் 5 ம் நாளில் கிருஷ்ணரின் லீலையைச் சொல்லும் விதமாக ராதா-கிருஷ்ணர் வேடத்தில் ஆடியபடி வந்தனர்.
4 / 8
திருப்பதி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்துார் கோயியில் இருந்து கொண்டுவரப்பட்ட மாலை,கிளி.
5 / 8
திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் 4ம் நாளில்சோலாப்பூர் கல்லுாரி மாணவியரின் பிரம்மாண்டமான மேளவாத்திய கச்சேரி.
6 / 8
மலையப்பசுவாமி தேவியருடன் கையில் புல்லாங்குழல் ஏந்திய வேணுகோபாலசுவாமி அலங்காரத்தில் தேவியருடன் ஊஞ்சல் உற்சவராக காட்சி தந்தார்.
7 / 8
திருமலையில் நடந்துவரும் பிரம்மோற்சவ விழாவில் சுவாமி வலம் வரும் வாகனங்கள் சிறப்பானதாக இருக்கும்.முத்துக்காளாலான முத்துப்பந்தல் வாகனத்தில் மலையப்பசுவாமி தேவியருடன் மாடவீதிகளில் உலாவந்தார்
8 / 8
திருமலை திருப்பதியில் நடந்துவரும் பிரம்மோற்சவ விழாவின் 4ம் நாளில் கேட்பவருக்கு கேட்ட வரமருளும் கற்பகவிருட்ச அலங்காரத்தில் உற்சவரான மலையப்பசுவாமி தேவியருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். படங்கள் : முருகராஜ் .
Advertisement