புகைப்பட ஆல்பம்:

திருப்பதி மலை வாழும் வெங்கடேசா !
1 / 7
ஊர்வலத்தில் கிருஷ்ணர் வேடமிட்டு கலந்துகொண்ட இந்த சிறு வயது பக்தர் பலரையும் கவர்ந்தார்.
2 / 7
இசை கலைஞர்கள் கரணம் போட்டு திறமையை காண்பிக்கின்றனர்.
3 / 7
திருமலை பிரம்மோற்சவ விழாவில் பல கிராமிய கலைஞர்களும் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்துவர்.ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாககுளம் பகுதியைச்சேர்ந்த இந்த கலைஞர்கள் நெஞ்சில் வாத்தியக் கருவியைக்கட்டி இசைத்தனர்.
4 / 7
திருமலைவரும் பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வேண்டுதல்,விரைவில் சொந்த வீடு கட்டவேண்டும் என்று விரும்புபவர்கள் ஆகாச கங்கை என்ற இடத்தில் உள்ள இறைவனைவேண்டி கற்களை அடுக்கி வைக்கிறார்கள்.,அடுக்கிவைக்கும் கற்களைக்கொண்டே ஒரு வீடு கட்டிவிடலாம் போலும்.
5 / 7
குளிக்கமுடியாது,தெளிக்கத்தான் முடியும்: எங்கும் நீக்கமற நிறைந்துள்ள தண்ணீர் கஷ்டம் திருமலையையும் விட்டு வைக்கவில்லை., மிகவும் சிரமப்பட்டு சமாளிக்கிறார்கள்.பாபவிநாசம் பகுதியில் அருவி போல விழுந்த தண்ணீர் தற்போது பெயருக்கு ஒழுகுகிறது.இதனால் குளிக்க ஆசையோடு வந்த பக்தர் ஒருவர் குளிப்பதற்கு பதிலாக தலையில் தண்ணீரை தெளித்துக்கொள்கிறார்.
6 / 7
திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் மூன்றாம் நாளில் ( 20 ம் தேதி ) உற்சவரான மலையப்பசுவாமி சிம்ம வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
7 / 7
பிரம்மோற்சவ 3 ம்நாள் விழா : உற்சவர் மலையப்பசுவாமி அன்ன வாகனத்தில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Advertisement