புகைப்பட ஆல்பம்:

பிரம்மோற்சவ விழா 5ம் நாள் !
1 / 8
பிரம்மோற்சவ விழாவின் போது நடைபெறும் ஊஞ்சல் உற்சவம் மிகவும் பிரசித்தமானதாகும்.,உற்சவரான மலையப்பசுவாமியை தேவியருடன் சேர்த்து ,மலர்களாலான ஊஞ்சலில் அமரவைத்து பாடல்கள் பாடி தாலாட்டுவார்கள்,அந்த சூழ்நிலையில் சுவாமியை பார்ப்பதும்,பாடல்களை கேட்பதும் ரம்மியமான அனுபவமாகும்.
2 / 8
பிரம்மோற்சவ விழாவில் உற்சவரான மலையப்பசுவாமி கிருஷ்ணருடன் வலம்வந்தார்.
3 / 8
விழாவில் கலந்துகொண்ட கிராமத்து கலைஞர் ஒருவர் கோலாட்டமாடியபடி ஊர்வலத்தில் வந்தார்.
4 / 8
பிரம்மோற்சவ விழா ஊர்வலத்தில் பல்வேறு சீர்வரிசைகளை சுவாமிக்கு படைப்பதற்காக கொண்டு சென்ற பக்தர்கள்.
5 / 8
திருப்பதி திருமலையில் நடந்துவரும் பிரம்மோற்சவ விழாவில் இரவு நேர உலாவின் போது உற்சவரான மலையப்பசுவாமி தேவியருடன் சர்வபூபாள வாகனத்தில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
6 / 8
திருப்பதி திருமலையில் நடந்துவரும் பிரம்மோற்சவ விழாவின் ஐந்தாம் நாளில் ( 22 ம் தேதி ) உற்சவரான மலையப்பசுவாமி மோகினி அலங்காரத்தில் தந்த பல்லக்கில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இவரது தோளில் இருக்கும் பச்சைக்கிளி ஸ்ரீ வில்லிபுத்தார் ஆண்டாள் கையில் உள்ள கிளியாகும்.,அதே போல அணிந்திருக்கும் பெரிய மாலையும் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையாகும்.
7 / 8
சுவாமி கருட வாகனத்தில் வலம் வருவதைக்காண கோயில் முன் திரண்டிருந்த பல லட்சம் பக்தர்கள்.
8 / 8
இரவு கருட சேவை நடைபெற்றது. கருட வாகனத்தில் வலம்வருவதற்கு முன் நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தில் உற்சவரான மலையப்பசுவாமி விசேஷ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Advertisement