புகைப்பட ஆல்பம்:

பிரம்மோற்சவம் ஏழாம் நாள் !
1 / 9
வெண்மேகம் போல உடையணிந்து கோலாட்டமாடிய பெண்கள்.
2 / 9
பிரம்மோற்சவ விழாவில் பல்வேறு ஊர்களில் இருந்து வந்த கலைக்குழுவினர் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர், சேலம் மேட்டூரைச் சேர்ந்த கலைக்குழுவினர் வித்தியாசமாக நடனமாடி பார்வையாளர்களை அசத்தினர்.
3 / 9
கோலாட்டமாட வந்த பெண் கரகாட்டமாட விரும்பி தலையில் கரகம் ஏற்றி ஆடினார்.,எங்கே கரகம் விழுந்துவிடுமோ என்ற பயம் கண்களில் தெரிகிறது.
4 / 9
நானும் கோலாட்டம் ஆட வர்ரேன்: பிரம்மோற்சவ விழா சுவாமி ஊர்வலத்தின் முன்பாக பல்வேறு மாநில கலைக்குழுவினைச் சேர்ந்தவர்கள் நடனமாடிவருவார்கள்,அவர்களைப் பார்த்த இந்த குழந்தை தானும் ஆடுவேன் என்று அடம்பிடித்து கோலாட்டமாடி, தானும் மகிழ்ந்து பார்வையாளர்களையும் மகிழ்வித்தது.
5 / 9
இது பக்திப்பழம் ! : பிரம்மோற்சவ விழாவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுவாமி ஊர்வலத்தின் போது நடனமாடுவார்கள் ,நேற்று 90 வயது பெரியவர் ஒருவர் கோவிந்தா...ஹரி கோவிந்தா என நடனமாடி அசத்தினார். சந்தோஷத்திற்கு ஏது வயது ?
6 / 9
விழாவில் யானை வாகனத்தில் மலையப்பசுவாமி .
7 / 9
சாஸ்திர சம்பிரதாயம் தப்பாமல் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் சுவாமி வருவதை ஒவ்வொரு தெரு முனையில் நின்று சங்கு முழக்கத்துடன் இவர் அறிவிக்கிறார்.
8 / 9
சூரிய பிரபை வாகனத்தில் வலம்வந்த மலையப்பசுவாமி .
9 / 9
திருமலை திருப்பதி பிரம்மோற்சவ ஏழாம் நாளில் ( 24 ம் தேதி ) பக்தர்களுக்கு அருள்பாலித்த மலையப்பசுவாமி .
Advertisement