புகைப்பட ஆல்பம்:

திருப்பதி பிரம்மோற்சவம் நிறைவுநாள்
1 / 5
பிரம்மோற்சவ விழாவில் ஏராளமான பெண் பக்தைகள் கலந்துகொண்டு நடனமாடி வந்தனர். நிறைவு நாளான்று ஆண் பக்தர் ஓருவர் அந்த பெண்களை மிஞ்சும் வகையில் மிகுந்த நளினத்துடன் நடனமாடியபடி வந்தார்.
2 / 5
நிறைவு நாள் அலங்காரத்திற்காக உற்சவர் மலையப்பசுவாமி, விலை மதிப்பற்ற ரூபி எனப்படும் சிவப்புகல் மற்றும் வைர, வைடூரிய நகைகள் மின்னும் வகையில், கோயிலின் மகாதுவாரம் எனப்படும் பிரதான வாசல் வழியாக வரும்போது வித்தியாசப்படுத்தி எடுத்த படம்.
3 / 5
நிகழ்ச்சியின் நிறைவு அலங்காரமாக உற்சவர் மலையப்பசுவாமி குதிரை வாகனத்தில் முதல் நாள் இரவு உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
4 / 5
சக்ர ஸ்நானத்தின் போது சேர்ந்து நீராட வேண்டி குளத்தை சுற்றி காணப்பட்ட பக்தர்கள்.
5 / 5
திருமலை திருப்பதியில் பிரம்மாண்டமாய் நடந்துவந்த பிரம்மோற்சவ விழா சக்ரஸ்நானம் நிகழ்ச்சியுடன் நிறைவு பெற்றது. உற்சவரான மலையப்பசுவாமியின் அம்சமான சக்ரத்தை, கோயிலின் அருகில் உள்ள புஷ்கரணி எனப்படும் புனிதநீர் குளத்தில் நீராட்டும் சக்ர ஸ்நானம் நடைபெற்றது.
Advertisement