புகைப்பட ஆல்பம்:

சகோதரத்துவத்தின் மகத்துவம் !
1 / 11
சின்னச் சிறு குழந்தைகளுடன் ரக்ஷாபந்தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் பிரதமர் மன்மோகன்சிங்.
2 / 11
டில்லியில் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுடன் ரக்ஷாபந்தன் கொண்டாடிய காங்கிரஸ் தலைவர் சோனியா.
3 / 11
வாகா எல்லையில் ராணுவ வீரர் ஒருவருக்கு ராக்கி கயிறு கட்டும் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீராங்கனை.
4 / 11
ரக்ஷாபந்தன் மகத்துவத்தை உணர்த்த ராக்கி கயிறுகளை சக மாணவர்களுக்கு கட்டும் பள்ளிக் குழந்தைகள்.
5 / 11
அண்ணன், தங்கை பாசத்தின் வெளிப்பாடாக கொண்டாடப்படும் ரக்ஷாபந்தன் விழாவை ஒட்டி ராக்கி கயிறுகளை தேர்வு செய்யும் இளம் பெண்கள்.
6 / 11
வயது ஒரு தடையில்லை. தன் சகோதரனுக்காக ராக்கி கயிறை ஆவலுடன் தேர்வு செய்யும் மூதாட்டி. இடம் ஜம்முகாஷ்மீர்.
7 / 11
தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் ராணுவ வீரர்கள், பாதுகாப்புடன் நலமாக இருக்க வாழ்த்தி ராக்கி கயிறு கட்டும் குழந்தை.
8 / 11
சகோதரத்துவம் இங்கு இருந்தே வளர வேண்டும். பாசத்தை பகிர்ந்து கொள்ளும் எதிர்கால தூண்கள்.
9 / 11
விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்க இல்லத்தரசிகள் எந்த ஒரு வாய்ப்பையும் நழுவ விடுவதில்லை. ரக்ஷாபந்தனை முன்னிட்டு காய்கறிகளால் ஆன ராக்கி கயிறை உருவாக்கி அமைச்சக சகோதரர்களுக்கு தங்கள் ‌துயரத்தை வெளிபடுத்தியுள்ளனர் ஆமாதாபாத்தைச் சேர்ந்த இந்த பெண்கள்.
10 / 11
டில்லி காமன்வெல்த் போட்டிக்கு வரவேற்பு தெரிவிக்கும் வகையில், போட்டியின் சின்னமான "சேரா"(புலி)உருவம் கொண்ட ராக்கி கயிறு விற்பனை அமோக ஆதரவை பெற்றுள்ளது.
11 / 11
மும்பையில் தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த ரக்ஷாபந்தன் விழாவில், பாலியல் தொழில் புரியும் பெண்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் ஆர்யா பப்பாருக்கு ராக்கி கயிறு அணிவித்தனர்.
Advertisement