புகைப்பட ஆல்பம்:

நவராத்திரி பிரம்மோற்சவம் ( போட்டோ& வீடியோ)- 3
1 / 7
நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் போது எளிய உடையில் வந்து பக்தர்களின் இதயத்தில் இடம்பிடிக்கும் வண்ணம் நடனமாடியவர்.
2 / 7
ஒவ்வொரு நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் போதும் வித்தியாசமாக ஏதாவது நடன நிகழ்ச்சி செய்து பெயரை தட்டிச்செல்ல வேண்டும் என்பதில் வருடாவருடம் நடைபெறும் ஆரோக்கியமான போட்டியின் காரணமாக, அரிசி குத்தும் பொம்மை உரல் உலக்கையுடன் நடனமாடியவர்.
3 / 7
நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில், ஊர்வலத்தின் போது தனது நடனத்தால் அசத்தும் பள்ளி மாணவி.
4 / 7
குறும்படங்கள் போல, நவராத்திரி பிரம்மோற்சவ விழா ஊர்வலத்தின் போது சிறு நடன நாடகங்கள் நடத்தப்படுகின்றன. பாஞ்சாலிக்கு கிருஷ்ணர் புடவையை வழங்கி, சபையில் மானம் காத்த நிகழ்ச்சி நடத்திக் காட்டப்பட்டது.
5 / 7
நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில், இரவு நேர உலாவின் போது உற்சவர் மலையப்ப சுவாமி அன்ன வாகனத்தில் வலம் வந்தார்.
6 / 7
என்ன தான் வண்ண விளக்குகள் வெளிச்சத்தை வாரி இறைத்தாலும், பழமை மாறாமல் பழைய காலத்தில் தீவட்டி வெளிச்சத்துடன் உலா வந்தது போலவே, இப்போதும் மாடவீதிகளில் இரவு நேரத்தில் சுவாமி உலா நடைபெறுகிறது. இரவு அன்ன வாகனத்தில் உற்சவர் மலையப்பசுவாமி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
7 / 7
திருமலை திருப்பதியில் நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் மூன்றாம் நாளில் உற்சவர் மலையப்பசுவாமி சிம்ம வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Advertisement