புகைப்பட ஆல்பம்:

நவராத்திரி பிரமோற்சவம் (போட்டோ - வீடியோ) - 5
1 / 10
திருமலை திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவ ஐந்தாம் நாளில், கருட சேவையை முன்னிட்டு ராஜகோபுர வாசலில் கருடவாகனத்தில் சுவாமி வலம் வருவது போன்ற காட்சியை மலர்களாலேயே வடிவமைத்து இருந்தனர்.
2 / 10
திருமலை திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளில், சுவாமி மாடவீதிகளில் வலம் வரும் போது, பெரிய ஜீயர், சின்ன ஜீயர் தலைமையில் வேதபண்டிதர்கள் வேதம் பாடியபடி வந்தனர்.
3 / 10
திருமலை திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் ஐந்தாம் நாளில், கிராமிய கலைஞர்கள் நிகழ்த்திய வித்தியாசமான நடன நிகழ்ச்சி இது.
4 / 10
திருமலை திருப்பதி நவராத்திரி பிரம்மோற்ச விழாவின் ஐந்தாம் நாளில், மாணவியர் பங்கேற்ற நடன நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று.
5 / 10
திருமலை திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் ஐந்தாம் நாளில்,சுவாமி மோகினி அலங்காரத்தில் வலம் வந்தார். இதனை முன்னிட்டு மோகினி போல வேடமணிந்த பெண் பக்தை ஒருவர், அசுரர்களை ஏமாற்றி தேவர்களுக்கு அமுதம் வழங்கும் காட்சியை அழகாக நடித்துக் காட்டினார்.
6 / 10
திருமலை திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் ஐந்தாம் நாளில், சுவாமி புறப்பாட்டின் போது மாடவீதிகளில் சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி மாணவிகள் வழங்கிய பல்சுவை நடனம் நடைபெற்றது.
7 / 10
திருமலை திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் உற்சவர் மலையப்ப சுவாமி, சர்வ பூபாள அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
8 / 10
திருமலை திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவ ஐந்தாம் நாள் விழாவில்,உற்சவர் மலையப்ப சுவாமி, மோகினி அலங்காரத்தில் தந்தப் பல்லக்கில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
9 / 10
திருமலையில் நடந்துவரும் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருட வாகன சேவையில்.,சர்வ அலங்காரத்துடன் உற்சவர் மலையப்பசுவாமி மூலவர் அணியும் காசு மாலை,மகாலட்சுமி ஆரம் அணிந்துவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்
10 / 10
திருமலையில் நல்ல மழை பெய்தது.,கொட்டும் மழையிலும் பக்தர்கள் குடைபிடித்தபடி சுவாமியை தரிசனம் செய்தனர்.
Advertisement