புகைப்பட ஆல்பம்:

பிரமாண்ட பிரம்மோற்சவம்.,
1 / 57
மோகினி அவதாரம் எடுத்த உற்சவரான மலையப்பசுவாமி உடன் வந்த கிருஷ்ணர்.
2 / 57
கருட வாகன சேவையை முன்னிட்டு மலர்களாலேயே கருட வாகனத்தில் பெருமாள் உலாவருவதைப் போல உருவாக்கி வைத்திருந்தனர்.(அடுத்த படம் ) பெருமாளை பார்த்த உற்சாகத்தில் பக்தியுடன் ஆடிய மூதாட்டி.
3 / 57
ஸ்வப்ன மஞ்சனம் எனப்படும் புனித நீரால் சுவாமிக்கு கோயிலுனுள் மங்கள நீராட்டு நடைபெற்றது.
4 / 57
சர்வபூபாள வாகனத்தில் உற்சவரான மலையப்ப சுவாமி
5 / 57
உற்சவரான மலையப்ப சுவாமி சர்வபூபாள வாகனத்தில் மாடவீதிகளில் வலம்வந்தார்.
6 / 57
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து வந்த ஆண்டாள் மாலையை அணிந்து,கையில் கிளி தாங்கி,உற்சவரான மலையப்பசுவாமி மோகினி அலங்காரத்தில்,தந்த பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
7 / 57
திருமலை திருப்பதியில் நடந்துவரும் பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளில் ( அக் 3ம் தேதி ) ஊஞ்சல் அலங்காரத்தில் தேவியருடனும்,நாரை பறவையுடனும் காட்சியளித்த சுவாமி.
8 / 57
முத்துபந்தல் வாகனத்தில் தேவியருடன்,மலையப்பசுவாமி
9 / 57
ஊஞ்சல் அலங்காரத்தில் மலையப்பசுவாமி
10 / 57
ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை சாற்றிய பிறகுதான் பிரம்மோற்சவத்தில் பெருமாள் கரூட வாகனத்தில் வலம்வருவார் என்பதால் அங்கு இருந்து புறப்பட்ட மாலை மற்றும் கிளிகள்,பட்டுவஸ்திரம் போன்றவை ஒரு கூடையில் வைத்து திருமலை மாடவீதிகளில் ஊர்வலமாக கொண்டு சென்று பெருமாள் சன்னதியில் சேர்க்கப்பட்டது.
11 / 57
சென்னையில் இருந்து புறப்பட்ட இந்து தர்மார்த்த சமிதியின் சார்பில் கொண்டுவரப்பட்ட வெண்பட்டு குடைகள் மாடவீதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோயிலில் சமர்ப்பிக்கப்பட்டது.
12 / 57
மகிழ்ச்சியில் சிறுவர்கள்
13 / 57
உற்சவர் மலையப்பசுவாமி உலாவரும் போது அவர் முன்பாக ஆடிப்பாடி பெண் பக்தர்கள்.
14 / 57
நான்காம் நாளில் கேட்பவருக்கு கேட்டவரமருளும் கற்பகவிருட்ச மர அலங்காரத்தில் உற்சவரான மலையப்பசுவாமி தேவியருடன் எழுந்தருளினார்.
15 / 57
உற்சவரைக்ககண்ட உற்சாகத்தில் கோலாட்ட நடனமாடுகின்றார் இவர்.
16 / 57
சக்ரஸ்நானத்தை முன்னிட்டு கோயில் குளத்தின் நடுவில் நீருற்று வடிவில் அமைக்கப்பட்டிருந்த சக்ரமூர்த்தி.
17 / 57
திருமலையில் ஊஞ்சல் அலங்காரத்தில் உற்சவமூர்த்தி.
18 / 57
திருமலை பிரம்மோற்சவ விழாவில் உற்சவர் மலையப்பசுவாமி குதிரை வாகனத்தில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
19 / 57
திருமலையில் மலையப்பசுவாமி மாடவீதிகளில் உலாவரும் போது பல்வேறு குழுக்களின் நடனம் இடம் பெற்றது.இந்த குழுவில் இடம் பெற்று இருந்தவர்கள் அனைவரும் மொட்டை போட்டு இருந்தது வித்தியாசமாக இருந்தது.
20 / 57
குளக்கரையில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
21 / 57
புஷ்கரணியில் நீராட்டுவதற்காக சுவாமியின் சக்ரம் கோயில் அர்ச்சகர்களால் குளத்திற்கு கொண்டுவரப்பட்டது.
22 / 57
திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவ நிறைவு விழா 9ம் நாளில் ( 7ம் தேதி ) கோயிலை ஒட்டியுள்ள "புஷ்கரணி' எனும் புனித நீர் குளத்தில் சக்ர ஸ்நானம் நடைபெற்றது. அது சமயம் கோயிலை சுற்றி அமர்ந்து இருந்த பக்தர்கள்.
23 / 57
"மலை'மேல் பக்தர்கள் கடல் போல் சூழ்ந்து நின்ற கோவிந்தா, கோபாலா கோஷமிட. தேரோட்டம் மாடவீதிகளில் குதூகலமாய் நடைபெற்றது.
24 / 57
சந்திர பிரபை வாகனத்தில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
25 / 57
சுவாமி ஊர்வலத்தின் போது பலரும் நடனமாடுவுதைப் பார்த்து தானும் பெரிய மனுஷி போல புடவைகட்டி கொண்டு நடனமாட கிளம்பி விட்டார் இவர்.
26 / 57
திருப்பதி திருமலையில் பிரம்மோற்சவ 8ம் நாளில் ( அக். 7ம் தேதி) உற்சவரான மலையப்பசுவாமி அலங்காரத்தில் .,
27 / 57
யானை வாகனத்தில் உற்சவர் மலையப்பசுவாமி கோவில் ராஜகோபுரம் வழியாக வருகிறார்.
28 / 57
சுவாமி உலாவரும் போது சுவாமிக்கு முன்பாக ஜீயர் மடத்தை சேர்ந்தவர்கள், ஜீயர் தலைøயில் திவ்யபிரபந்த பாடல்களை பாடியபடி வந்தனர்.
29 / 57
பெண்களுக்கு இணையான நளினத்துடனும்,லாவகத்துடனும் தனியாக நடனமாடிவந்த சென்னையை சேர்ந்த செந்தில் என்ற நடன கலைஞர்.
30 / 57
பக்தர்கள் அதிகம் பார்த்து பரவசப்படுவது இசைக்கு ஏற்ப நடனமாடும் இந்த வண்ண நீருற்றை பார்த்துதான்.கோயிலின் பின்பக்கம் தங்க விமானத்தின் பின்னனியில் நீர் நடனமிடுகிறது.
31 / 57
ஊஞ்சல் அலங்காரத்தில் கையில் வீணை கோலத்தில் உற்சவர் மலையப்பசுவாமி.
32 / 57
ஹம்ச வாகனம் எனப்படும் அன்ன வாகனத்தில் மலையப்பசுவாமி திருமலை கோயிலின் ராஜகோபுரம் பகுதியில் கூடியிருந்த பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
33 / 57
ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த பெண்கள் மணிப்புரி நடனமாடி வந்தனர்.
34 / 57
அந்த வகையில் கர்நாடக மாநில பரதக்கலைஞர்களின் நடனமிது.
35 / 57
சுவாமி உலாவின் போது நாரதம் வேடத்தில் வந்து நடனமாடியவர்கள்.
36 / 57
மலையப்பசுவாமி சூரிய பிரபை வாகனத்தில் சர்வ அலங்காரத்துடன் வலம்
37 / 57
திருப்பதி திருமலையில் பிரம்மோற்சவ விழாவின் ஏழாம் நாளில் உற்சவரான மலையப்பசுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
38 / 57
பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாளன்று சுவாமி அனுமன் வாகனத்தில் வலம்வந்தார்.
39 / 57
பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாளன்று சுவாமி அனுமன் வாகனத்தில் வலம்வந்தார்.
40 / 57
பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாளான்று மலையப்பசுவாமி தங்க ரதத்தில் தேவியருடன் வலம்வந்தார்.
41 / 57
சுவாமியை தரிசித்த ஆனந்தம் இவரிடம் நடனமாக வெளிப்படுகிறது.
42 / 57
திருப்பதியில் வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் பிரம்மோற்சவம் மிகவும் விசேஷம் என்றால், பிரம்மோற்சவத்தில் ஒரு நாள் உற்சவரான மலையப்பசுவாமி கருட வாகனத்தில்வலம் வருவது இன்னும் விசேஷம்.அன்றைய தினம் மூலவரின் நகைகள் அனைத்தையும் அணிந்துவருவதால் மூலவரான ஸ்ரீ வெங்கடாஜலபதியே தங்களைக்காண வருவதாக ஐந்து லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திரண்டு வந்து பல மணிநேர அந்த சில நிமிட தரிசனம் செய்வார்கள்.அந்த திவ்யமான கருட சேவாவை நீங்கள் இங்கே தரிசிக்கிறீர்கள்.
43 / 57
மூலவரான சீனிவாசப்பெருமாளை தரிசிக்க செல்லும் வழியில் உள்ள கொடிமரம் பலவித மலர்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
44 / 57
சுவாமி உலாவின் போது ஆடிப்பாடிவரும் பக்தர்கள்.
45 / 57
பக்தர்கள் வெள்ளத்தில் மலையப்பசுவாமி .
46 / 57
திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் மூன்றாம் (அக்-1ம் தேதி )நாளில் உற்சவரான மலையப்பசுவாமி சிம்ம வாகனத்தில் மாடவீதிகளில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
47 / 57
திருப்பதியில் வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் பிரம்மோற்சவம் மிகவும் விசேஷம் என்றால், பிரம்மோற்சவத்தில் ஒரு நாள் உற்சவரான மலையப்பசுவாமி கருட வாகனத்தில்வலம் வருவது இன்னும் விசேஷம்.அன்றைய தினம் மூலவரின் நகைகள் அனைத்தையும் அணிந்துவருவதால் மூலவரான ஸ்ரீ வெங்கடாஜலபதியே தங்களைக்காண வருவதாக ஐந்து லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திரண்டு வந்து பல மணிநேர அந்த சில நிமிட தரிசனம் செய்வார்கள்.அந்த திவ்யமான கருட சேவாவை நீங்கள் இங்கே தரிசிக்கிறீர்கள்.
48 / 57
பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பெருமாளின் கருட சேவை நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியை காண்பதற்கு பல லட்சம் பக்தர்கள் கோயில் முன் கூடியிருந்தனர்.
49 / 57
விதம்,விதமான கடவுளர் வேடத்தில் வந்துள்ள பக்தர்கள்
50 / 57
கருட வாகனத்தில் தேவியர் சமேதரராய் பறப்பது போன்ற இந்த அலங்காரம் பலரது கவனத்தையும் கவர்ந்துள்ளது.
51 / 57
திருமலையில் திரும்பிய பக்கம் எல்லாம் கண்ணைப்பறிக்கும் விதத்தில் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
52 / 57
பகவான் வருகைக்காக காத்திருக்கும் பக்தர்கள், அடுத்தபடம் சிறப்பான சீருடைகளுடன் யானைப்பாகன்
53 / 57
பெருமாளை பார்க்க பக்தர்கள் விதம்,விதமான வேடங்களில் வருவார்கள்.இங்கே ஒரு பக்தர் பெருமாள் வேடமிட்டே வந்துள்ளார்.
54 / 57
மாட வீதிகளில் சுவாமி வலம்வரும் போது பக்தர்கள் ஆடிப்பாடி வருவார்கள்.இங்கே ஆனந்தம் பொங்க கோலமாட்டமிடும் பெண்கள்.
55 / 57
பிரம்மோற்சவ இரண்டாம் நாளில் உற்சவரான மலையப்பசுவாமி சின்ன சேஷ வாகனம் எனப்படும் ஐந்து தலை நாக வாகனத்தில்,குழல் ஊதும் கண்ணன் அலங்காரத்தில்,சர்வ அலங்காரத்துடன் எழுந்தருளியுள்ளார்.
56 / 57
திருமலை திருப்பதியில் நடந்துவரும் பிரம்மோற்சவ விழாவின் முதல் நாளில் உற்சவரான மலையப்பசுவாமி பெரிய சேஷ வாகனத்தில் தேவியருடன் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
57 / 57
பிரம்மோற்சவ விழாவினை நிறைய ஆலோசனைகளின் அடிப்படையில் பக்தர்கள் பாராட்டும்படி பலவித ஏற்பாடுகளை செய்துள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளும் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பலப்படுத்தப்பட்டுள்ளது.இதன் காரணமாக சிறப்பு அனுமதி பெற்றவர்கள் மட்டுமே பெருமாளின் அலங்காரம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை படமெடுக்கமுடியும்.அந்த வகையில் கடந்த 9 ஆண்டுகளை தொடர்ந்து 10வது ஆண்டாக "தினமலர்' நாளிதழுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அனுமதியின் காரணமாக எடுக்கப்பட்ட படங்கள் இங்கே இடம் பெற்றுள்ளன.பிரம்மோற்சவம் முடியும்வரை இந்த படங்கள் தொடரும். முதல்நாள் கொடியேற்றம் (29 ம்தேதி ).
Advertisement