குளோபல் ஷாட் ஆல்பம்:

30-May-2012
1 / 10
இத்தாலியின் கேங்சோ பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவான இந்தநிலநடுக்கத்தால் சேதமடைந்த தனது வீட்டை பார்வையிடுகிறார் பெண்மணி ஒருவர்.
2 / 10
லித்துவேனியா நாட்டின் வில்னியஸ் நகரில் நடந்த சோப் நுரை குமிழ் போட்டியில் பங்கு கொண்ட பெண் ஒருவர், பிரமாண்ட குமிழை உருவாக்கி ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார்.
3 / 10
ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் பகுதியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் சேதமடைந்த வாகனத்தை பார்வையிடுகிறார் ஆப்கன் ராணுவ வீரர் ஒருவர்.
4 / 10
கத்தார் தலைநகர் தோகாவில் உள்ள வில்லாஜியோ மாலில் ஏற்பட்ட தீவிபத்தில் காயமடைந்தவர்கள் மேல்சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.
5 / 10
முறையான விசாரணையின்றி, பல ஆண்டுகளாக சிறையில் உள்ள விடுதலைப்புலிகளை விடுதலை செய்யக்கோரி, அவர்களது உறவினர்கள் கொழும்புவில் உள்ள மத்திய சிறை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
6 / 10
கம்போடிய தலைநகர் பினோம்பென் நகரில் துவங்கிய 6வது ஆசியான் நாடுகளின் பாதுகாப்புத்துறை அமைச்சர்களின் மாநாட்டு துவக்க விழாவில் பாரம்பரிய நடனமாடிய பெண்.
7 / 10
அமெரிக்காவின் ஹோனலூலு நகரில் தங்கள் முன்னோர்களை நினைத்து கடலில் மெழுகுவர்த்தியை மிதக்க விடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் மெழுகுவர்த்தியை மிதக்க விட்டு அஞ்சலி செலுத்தினர்.
8 / 10
ஆப்கன் தலைநகர் காபூல் நகர தெரு ஒன்றில் நடந்து செல்லும் பெண்மணி. அருகில் உள்ள சுவற்றில், படிக்கும் சிறுவன் ஒருவன் கொல்லப்படுவது போன்ற சித்திரம் வரையப்பட்டுள்ளது.
9 / 10
விமான நிலையங்களில் பறவைகளால் ஏற்படும் விபத்துக்களை தவிர்ப்பதற்காக பிரேசிலில் உள்ள சால்கடோ பிலோ விமான நிலையத்தில் பருந்துகள் வளர்க்கப்படுகின்றன.
10 / 10
சோமாலிய அதிபர் ஷரிப் ஷேக்கின் வாகன கான்வாய் மீது தாக்குதல் நடத்திய அல் சபாப் படையினருடன் சண்டையிடுவதற்காக வந்த சோமாலிய படை வீரர்கள்.
Advertisement