குளோபல் ஷாட் ஆல்பம்:

31-May-2012
1 / 10
இந்திய செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் மாஸ்கோவில் நடைபெற்ற உலக செஸ் போட்டியில் இஸ்ரேலிய வீரர் ஜெல்பாண்டு எதிர்கொண்டு உலக சாம்பியன் பட்டத்தை வென்றார்.
2 / 10
ஜெர்மனி, பெர்லினிலுள்ள திர்பார்க் உயிர் பொருட்காட்சி சாலையில் பிறந்து ஏழு வாரங்களான பெண் மலைசிங்கம்.
3 / 10
ஆப்கானிஸ்தான், டெக்பாலா மாவட்டத்தில் சாலையில் நிகழ்ந்த வெடிகுண்டு வெடிப்பில் மூன்று நபர்கள் கொல்லப்பட்டனர்.
4 / 10
வியட்நாம், நாகி அன் மாகாணத்தில் போலீசாரால் கைபற்றப்பட்ட புலிகளின் உடல்கள். இப்புலிகளின் எலும்புகள் வலி மருந்தாக பயன்படுத்தப்படுவதால் கொல்லப்படுகின்றன என போலீசார் தெரிவித்தனர்.
5 / 10
சர்வதேச விண்வெளி நிலைய இயந்திர கரங்களில் பொருந்தியுள்ள "ஸ்பேஸ் எக்ஸ்' என்ற முதல் வணிக சரக்கு பயன்பாட்டு விண்கலம்.
6 / 10
2008 ஆண்டு உலக பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு சீனாவில் எச்சரிக்கையுடன் பொருளாதார நடவடிக்கை வருகிறது. தலைநகர் பெய்ஜிங்கில் புதிதாக கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தில் வேலை செய்யும் ஊழியர்கள்.
7 / 10
ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள லண்டன் நகரில் புகழ்பெற்ற "டவர் பிரிட்ஜ்' பாலம் ஒளிவிளக்கால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
8 / 10
மலேசியா, கோலாலம்பூரில் புதிதாக கட்டப்படுகின்ற மசூதியின் இறுதி பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்கள்.
9 / 10
ஜப்பான் சாப்ட்பேங்க் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட கதிர்வீச்சை அளவிடும் வசதியுடைய அலைபேசியை காட்டும் அழகி.
10 / 10
நூற்றாண்டின் அரிய நிகழ்வான சூரியன் மற்றும் பூமிக்கிடையில் வெள்ளி கிரகம் வரும் ஜூன் 5 ஆம் தேதி நடைபெறுகிறது.
Advertisement