குளோபல் ஷாட் ஆல்பம்:

01-Jun-2012
1 / 10
இலங்கை விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த வாழைப்பழங்களை சூரியவினாவிலுள்ள சந்தைக்கு கொண்டு செல்கின்றனர்.
2 / 10
செயற்கைகோள் புகைப்படத்தில் காணப்படும் உலகத்தின் கூரை என அழைக்கப்படும் திபெத் பீடபூமி.
3 / 10
கம்போடியா, புனோ பென் பகுதியில் கிராமவாசிகளை தங்கள் குடியிருப்பில் இருந்து அப்புறப்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்கக்கோரி நடந்த பேரணியில் கலந்து கொண்ட பெண்.
4 / 10
தென் கொரியா, சியோலில் புகையிலை ஒழிப்பு தினத்தில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர்கள்.
5 / 10
போலாந்து மற்றும் உக்ரைன் இணைந்து நடத்தும் "யுரோ 2012' கால்பந்து போட்டிக்கு சிறப்பு 141 அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள தங்க நாணயத்தை அந்நாட்டு வங்கி வெளியிட்டுள்ளது.
6 / 10
நேபாள உச்ச நீதிமன்ற நீதிபதி காத்மன்டில் சுட்டு கொல்லப்பட்ட இடத்தை ஆய்வு செய்யும் போலீசார்.
7 / 10
ஜெர்மனி, பியுசன் நகரில் சுற்றுலா வந்த சீன இளம் தம்பதியினர் மீண்டும் தங்கள் திருமண விழாவை நிகழ்த்தி மகிழ்ந்தனர்.
8 / 10
ஈராக்கில் வளைகுடா போரின் காரணமாகவும், அதை தொடர்ந்து நடந்த கலவரங்களாலும் இரண்டடுக்கு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டடுக்கு பஸ் சர்வீஸ் நேற்று முன்தினம் முதல் மீண்டும் துவங்கியது. தலைநகர் பாக்தாத்தில் ஆர்முடன் பயணிகள் இந்த பஸ்சில் பயணித்தனர்.
9 / 10
ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார சிக்கல் நீடிக்கிறது. ஸ்பெயின் நாட்டில் துப்புரவு தொழிலாளர்களுக்கு உரிய சம்பளம் கொடுக்காததால் அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பார்சிலோனா நகர விமான நிலையத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன.
10 / 10
வாஷிங்டனில் நடைபெறுகின்ற 84வது ஆண்டு தேசிய ஸ்பெல்லிங் பீ நிகழ்ச்சியில் 4வது சுற்றில் பங்கேற்ற பிலடெல்பியா பகுதியை சேர்ந்த லினா கிரீன்பெர்க்.
Advertisement