குளோபல் ஷாட் ஆல்பம்:

02-Jun-2012
1 / 10
லிதுவேனியாவின் வில்னியஸ் நகரில், சோப்புநீர் குமிழி போட்டி நடந்தது. 15க்கும் அதிகமான நாடுகளை சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்று ராட்சத குமிழிகளை உருவாக்கி ஆச்சரியத்தை ஏற்படுத்தினர்.
2 / 10
அமெரிக்காவில் நடந்த ஆங்கில உச்சரிப்பு போட்டியில் முதல் பரிசு பெற்ற நிக்தா நந்திபதி, இறுதி சுற்றில் வார்த்தையை படிக்கிறார். பின்னால் நிற்பவர்கள் நிக்தாவின் பெற்றோர்.
3 / 10
வடகொரியாவில் ஜூன் 1ம் தேதி சர்வதேச தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி கியாங் சாங் நகரில்உள்ள மழலையர் பள்ளியில் பெயின்டால் வரையப்பட்ட அமெரிக்க வீரர் ஒருவரின் படத்தை பொம்மை துப்பாக்கியால் சூட குறிபார்த்த குழந்தை.
4 / 10
நைஜீரியாவில் உள்ள புகழ்பெற்ற லாகோஸ் பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்ற அந்நாட்டு அதிபர் முடிவு செய்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலை மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். பல்கலைக்குள் போலீசார் வராதபடி மாணவர்கள் கற்களை போட்டு தடை ஏற்படுத்தி இருந்தனர்.
5 / 10
ஐரோப்பிய நாடுகளில் பொருளாதாரச் சிக்கல் நீடிக்கிறது. ஸ்பெயின் நாட்டில், துப்புரவுத் தொழிலாளர்களுக்கு உரிய சம்பளம் கொடுக்காததால், அவர்கள் ÷வலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பார்சிலோனா நகரவிமான நிலையத்தில், குப்பை குவிந்து கிடக்கிறது.
6 / 10
தூசுகளால் பலருக்கு அலர்ஜி ஏற்படுகிறது.சுத்தம் செய்யாமல் இருக்கும் பகுதியில் படியும்தூசுகளால் உருவாகும் கிருமி தான், அலர்ஜியைஏற்படுத்துவதாக, அமெரிக்க டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த அலர்ஜியை ஏற்படுத்தும் கிருமியின்உருவம், 200 மடங்கு பெரிதாக்கப்பட்ட படம்,தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
7 / 10
இந்தோனேசியா, ஆக்ஸ் மாகாணத்தில் அத்துமீறி பிறர் நிலத்தில் நுழையும் சுமத்திரன் யானைகள் விஷம் வைத்து கொல்லப்படுகின்றன. தற்போது 3000 சுமத்திரன் யானைகள் மட்டுமே உள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.யானை இறந்த இடத்தில் காட்டு இலாகா அதிகாரி ஆய்வு செய்கிறார்.
8 / 10
அமெரிக்கா நடந்த ஆங்கில உச்சரிப்பு போட்டியில் அரைஇறுதியில் சுற்றில் வார்த்தையை படிக்கும் ஜீ கேனிட்டி.
9 / 10
ஆப்கானிஸ்தானில் நேட்டோ விநியோக வரி விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தொரிவித்து, பாகிஸ்தான், குவேட்டாவில் பாதுகாப்பு கவுன்சில், இஸ்லாமிய கட்சிகள் இணைந்து நடத்திய போராட்டத்தில் அமெரிக்க கொடியை எரித்தனர்.
10 / 10
அமெரிக்கா உள்ள மினசோட்டா மிருககாட்சி சாலையில் உள்ள அமூர் சிறுத்தை குட்டிகளை ஈன்றுயுள்ளது.
Advertisement