குளோபல் ஷாட் ஆல்பம்:

03-Jun-2012
1 / 10
இத்தாலியின் மிலன் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போப் 16ம் பெனடிக், அங்கு இன்டர் மிலன் அர்ஜென்டைன் கால்பந்து அணி கேப்டன் சேவியர் ஜெனடியின் குழந்தையை கொஞ்சுகிறார்.
2 / 10
பிலிப்பைன்ஸ் நாட்டில் உருவாகியுள்ள மாவார் புயல் காரணமாக, தலைநகர் மணிலாவின் வடமேற்கு பகுதியான நவேடா கடற்பகுதியில் அலைகளின் வேகம் மிக அதிகமாக இருந்தது.
3 / 10
சீனாவின் வடக்கு பகுதியான படாலிங்கில், வார விடுமுறையை கொண்டாட சீனப்பெருஞ்சுவரில் குவிந்த மக்கள் கூட்டம்.
4 / 10
மூன்று நாட்கள் பயணமாக, போப் 16ம் பெனடிக் இத்தாலி சென்றுள்ளார். அங்குள்ள மிலன் நகரின் லா ஸ்கேலா ஓபரா ஹவுசில், டேனியல் பேரம்பாய்ன் என்பவர் நடத்திய இசை நிகழ்ச்சியில் போப் கலந்து கொண்டார்.
5 / 10
கடந்த 2003ம் ஆண்டு, தனது ஆசிரியரின் நண்பரை திருமணம் செய்து கொள்ள மறுத்த காரணத்திற்காக, பாகிஸ்தானைச் சேர்ந்த நைலா பர்கத் என்பவர் மீது ஆசிட் வீசப்பட்டது. இதில் முகம் சிதைந்த நிலையில் பர்கத், தனது முந்தைய போட்டோவுடன்.
6 / 10
ராணுவ கோர்ட்டால், எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக்கிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட செய்தியை ரேடியோவில் கேட்டு சந்தோஷத்தில் ஆர்ப்பரிக்கும் கெய்ரோ மக்கள்.
7 / 10
கடந்த ஆண்டு ஹோசினி முபாரக்கை பதவி விலக கோரி ஆர்ப்பாட்டம் செய்தவர்களை கொலை செய்த வழக்கில் அவருக்கு ராணுவ கோர்ட்டால் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவருக்கு மரணதண்டனை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி, தலைநகர் கெய்ரோவில் தூக்குக்கயிறுடன் ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள்.
8 / 10
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு பொருட்களை கொண்டு சென்ற ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் என்ற விண்கலம், தனது பணியை முடித்துக்கொண்டு கிளம்ப தயாராக உள்ளது. கீழே பூமியில் தெரிவது பசிபிக் பெருங்கடல்.
9 / 10
சோமாலியாவின் எல்சா பியாஹா பகுதியில், அல் சாப் பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள அந்நாட்டு ராணுவத்தினர்.
10 / 10
தென் ஆப்ரிக்காவின் கேப்டவுன் நகர புறநகர்ப்பகுதியில் அமைந்துள்ள ஒயின்யார்டு. இங்கு தயாரிக்கப்படும் ஒயின்கள் தரமானதாகவும், சிறந்ததாகவும் உலக மார்க்கெட்டால் அறியப்படுகிறது.
Advertisement