குளோபல் ஷாட் ஆல்பம்:

06-Jun-2012
1 / 9
ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள உயிரியல் பூங்காவில் பெற்றோரின் தும்பிக்கையை பிடித்தபடி, நடை பயிலும் குட்டி யானை.
2 / 9
பாலஸ்தீன நாட்டின் காசா சிட்டி பகுதியில், தன் கால்களில் மருதாணியிட்டு தன்னை அழகுபடுத்திக் கொள்ளும் பெண்.
3 / 9
தைவான் தலைநகர் தைபேயில் உள்ள தைபே உலக வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் கம்ப்யூடெக்ஸ் கண்காட்சியில் புதிய வரவுகளை தேர்வு செய்யும் புதுமை விரும்பிகள்.
4 / 9
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகிலுள்ள சேரிப்பகுதியில் உள்ள ஆப்கானிஸ்தான் அகதிகள் முகாமில், நிகழ்கால துன்பங்களை மறந்து இத்தருணத்தை நற்தருணமாக மாற்றி மகிழும் இளஞ்சிறார்கள்.
5 / 9
பிரிட்டிஷ் அரசி எலிசபெத் அரியணை ஏறிய வைர விழா லண்டனில் கொண்டாடப்பட்டது. பக்கிங்ஹாம் அரண்மனையில் நடந்த இசைவிழாவில் ஆஸ்திரேலிய பாடகி கைளிமினோகியு தனது குழுவினருடன் ஆடிப்பாடினார்.
6 / 9
நைஜீரியாவில் அபுஜாவிலிருந்து லாகோஸ் நோக்கிச் சென்ற பயணிகள் விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது. சடலங்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
7 / 9
வரும் சனிக்கிழமை நடைபெற உள்ள பெல்மாண்ட் ஸ்டேக்ஸ் குதிரையேற்ற பயிற்சிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்த டுல்லாஹன்.
8 / 9
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிப் போட்டியில் நட்சத்திர வீரர் ரோஜர் பெடரரின் சர்வீசை துல்லியமாக எதிர்கொள்ளும் அர்ஜென்டினா வீரர் ஜூவான் மார்ட்டின் டெல் பொட்ரோ.
9 / 9
பாகிஸ்தானின் ராவல்பிண்டி அருகே மலைச்சரிவில் விழுந்து கிடக்கும் பேருந்திலிருந்து பயணிகளை மீட்கும் பணி நடக்கிறது.
Advertisement