குளோபல் ஷாட் ஆல்பம்:

09-Jun-2012
1 / 10
ஐரோப்பிய நாடுகளில் கடுமையான பொருளாதார நெருக்கடி காணப்படுகிறது. இதை சமாளிக்க ஏராளமான சிக்கனநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஸ்பெயின் நாட்டு அரசு, நிலக்கரிக்குரிய மானியங்களை ரத்து செய்துள்ளது. இதை கண்டித்து சுரங்க ஊழியர்கள் சினிரா நகரில் நெடுஞ்சாலை மறியல் போராட்டம் நடத்தினர். தங்களை விரட்ட வரும் போலீசாரை நோக்கி ஒருவர் உண்டிவில்லால் கல்லெறிகிறார்.
2 / 10
ஐரோப்பிய கால்பந்து போட்டிகள் துவங்கி விட்டன. இந்த போட்டிகள் நடக்கும் இடங்களில் விபசாரம் கொடிகட்டி பறக்கும். கால்பந்து போட்டியை ரசிக்க வருபவர்களை கவரும் செக்ஸ் தொழிலாளர்களுக்கு எய்ட்ஸ் தடுப்பு முறைகளை விளக்குகிறார் சமுக சேவகி ஒருவர். இடம்: உக்ரைன் நாட்டின் கீவ் நகரம்.
3 / 10
தாய்லாந்தின் பாங்காக் நகரில் வெளிநாட்டுக்கு கடத்தப்பட இருந்த 110 எறும்பு திண்ணிகளை, சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். சாதாரண பொருட்கள் போன்று பெட்டிகளில் அடைக்கப்பட்டுள்ள எறும்பு திண்ணிகள் சுருட்டி வைக்கப்பட்டுள்ளன.
4 / 10
இந்தோனேஷியாவில் வசிக்கும் இந்துக்கள் தங்களின் "மெகரே-கரே' என்ற சமயச்சடங்கு நிகழ்ச்சியை முன்னிட்டு கிழக்கு பாலித்தீவில் உள்ள டெங்கனன் என்ற இடத்தில் தாழம்பூ இலைகளால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
5 / 10
ஆஸ்திரேலியா இன்க்ரெய்ஸ் பகுதியில் உள்ள ஒரு செடியில் பச்சை நிறம் கொண்ட வெடிகிளி ஷாமோமைல் செடியில் அமர்ந்திருக்கும் அழகான காட்சி.
6 / 10
ஜெர்மனி, ஹான்கோவர் மிருக காட்சி சாலையில் மஞ்சள் மற்றும் புளு நிறம் கொண்ட லோரென்சோ பறவை(ஆரா ஆராரானா) இறகை விரித்தப்படி நிற்கிறது.
7 / 10
எகிப்த்தில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்ப்பாளர்கள் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
8 / 10
பாகிஸ்தானில் பஸ்சில் வெடிகுண்டு வெடித்ததில் படுகாயமடைந்தவரை சிகிச்சைக்கு அழைத்து சென்றனர்.
9 / 10
ஈராக்கில் சிறப்பு கமாண்டோ படைவீரர்கள், காரை ஆய்வு செய்து, சந்தேகத்தின் பேரில் அதில் இருந்த மூன்று பேரை கைது செய்தனர்.
10 / 10
பெரு நாட்டின் 14 வெளிநாட்டு பயணிகள், தென் கொரியாவை சேர்ந்த 8 பேர் மற்றும் ஐரோப்பாவை சேர்ந்த 3 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் பனிபொழிவில் மறைந்தது.இதை கண்டுபிடிக்கும் பணியில் போலீஸ் அதிகாரிகள் தீவிரமாக இருக்கின்றனர்.