குளோபல் ஷாட் ஆல்பம்:

10-Jun-2012
1 / 10
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பட்டத்தை ரஷ்யாவின் மரியா ஷரபோவா வென்றார். இறுதிப்போட்டியில், இத்தாலி வீராங்கனை ஷாரா ஈரானியை எதிர்கொண்ட ஷரபோவா, 6-3, 6-2 செட் கணக்கில் வென்றார். வெற்றிக்களிப்பில் ஷரபோவா.
2 / 10
உக்ரைன் தலைநகர் கீவ் நகரில், யூரோ கோப்பை கால்பந்து போட்டிகளின் கொண்டாட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், விலங்குகளை கொல்ல வேண்டாம் என்பது குறித்த விழிப்புணர்வு போராட்டமும் அங்கு சூடுபிடித்துள்ளது.
3 / 10
பிஜி நாட்டில் நடைபெற்று வரும் சர்வதேச நீர்ச்சறுக்கு போட்டியில் வெற்றிவாகை சூடிய அமெரிக்க வீரர் ஹாப்குட்.
4 / 10
அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்றுவரும் அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் தொடரில், அசகாய சாகசம் நிகழ்த்தும் நாஸ்டியா லியூகின்.
5 / 10
போர்ச்சுகல் நாட்டின் லிஸ்பனில் நடைபெற்ற வால்வோ பாய்மரபடகு போட்டியில் வெற்றி இலக்கை நோக்கி முன்னேறும் படகுகள்.
6 / 10
இலங்கையில் புதிதாக கட்டப்பட்டு செயல்படத்துவங்கியுள்ள ஹம்பன்தோட்டா துறைமுகத்தில் ஏற்றுமதிக்காக காத்திருக்கும்ஹுண்டாய் கார்கள்
7 / 10
யூரோ கோப்பை கால்பந்து தொடரின் லீக் போட்டியில் ரஷ்ய அணி, செக் குடியரசு அணியை 4-1 கணக்கில் வென்றது. உக்ரைனில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரஷ்ய அணி ஆதரவாளர்களுக்கும், உக்ரைன் அணி ஆதரவாளர்களுக்குமிடையே பெரும்கைகலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர்களை கட்டுப்படுத்தும் போலீசார்.
8 / 10
சிங்கப்பூரில் நடைபெற்று வரும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் உற்சாக நடனமாடிய பாலிவுட் நடிகர்கள் ஆயுஷ்மன் குரானா மற்றும் ரன்பீர் கபூர்.
9 / 10
இந்தோனேஷியாவின் பாலி தீவில், வெங்காய அறுவடை பணிகளை மும்முரமாக மேற்கொண்டுள்ள பெண்கள்.
10 / 10
சிங்கப்பூரில் நடைபெற்று வரும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில், ஆஸ்கார் மற்றும் கிராமி விருது நாயகன் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் கலந்துகொண்டார்.
Advertisement