குளோபல் ஷாட் ஆல்பம்:

13-Jun-2012
1 / 10
லண்டன் ஒலிம்பிக் போட்டி ஜூலை 27ம் தேதி துவங்குகிறது. துவக்க விழா நடைபெற உள்ள மைதானம், இங்கிலாந்தின் கிராமப்புறம் போல பசுமையாக மாற்றப்பட உள்ளது. இதன் மாதிரியை பார்வையிட்ட ஹாலிவுட் இயக்குனர் டேனி பாய்ல்.
2 / 10
வங்கதேச தலைநகர் டாக்காவில் சமீபத்தில் வங்கப் புலிக்குட்டிகள் கைப்பற்றப்பட்டன. அது தற்போது வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. வங்கப்புலிக் குட்டிக்கு பீடிங் பாட்டில் மூலம் பால் ஊட்டும் விலங்கு ஆர்வலர்.
3 / 10
சீனாவின் ஹூபெய் மாகாணத்தின் ஹூஹான் நகரில் சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்கள் பத்திரிகையாளர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன. சீன நகரங்களிலிருந்து இதுவரை 1 லட்த்திற்கும் மேற்பட்ட ஆயுதங்கள், 250 டன்களுக்கும் மேற்பட்ட வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ள சீன அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 / 10
தைவான் நாட்டில் பெய்த தொடர்மழையால், நாடே வெள்ளக்காடாக மாறியுள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளை இழந்துள்ளனர். தலைநகர் தைபேயை அடுத்த துசெங் நகரில், மீட்புப்படையினரின் உதவியுடன் பாதுகாப்பான இடத்திற்கு செல்லும் மக்கள்.
5 / 10
தென்கொரியாவின் சியோர்வோன் பகுதியில் நடைபெற்று வரும் தென் கொரிய மற்றும் அமெரிக்க நாடுகளின் கூட்டு ராணுவ பயிற்சி நடவடிக்கைகளின் போது ராக்கெட் லாஞ்சரிலிருந்து சீறிப்பாயும் ராக்கெட்.
6 / 10
மியான்மர் நாட்டின் ரகின் மாகாணத்தில் நடைபெற்று வரும் கலவரத்தால், முஸ்லீம்கள் பலர் தங்கள் உடைமைகளுடன் வேறிடங்களுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.
7 / 10
யு.எஸ். ஓபன் கோல்ப் சாம்பியன் தொடருக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அதனிடையே, பத்திரிகையாளர்களின் புகைப்பட கண்களுக்கு போஸ் கொடுத்த டைகர் உட்ஸ் மற்றும் கேசே மார்ட்டின்.
8 / 10
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் 2 பேர் பலியாயினர். சம்பவ இடத்தை ஆய்வு செய்யும் போலீஸ் அதிகாரிகள்.
9 / 10
ஆஸ்திரியா நாட்டின் சால்ஜ்பர்க் நகரில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில், மலரின் மீது அமர்ந்து தேனை பருக தயாராகும் லேடிபேர்ட் பூச்சி.
10 / 10
ஆப்கானிஸ்தானின் பக்லான் மாகாணத்தில் நேற்றுமுன்தினம் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலச்சரிவில் புதையுண்ட மண்வீடுகளில் உள்ளவர்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
Advertisement