குளோபல் ஷாட் ஆல்பம்:

14-Jun-2012
1 / 10
சீன தொழிலாளர்களின் நலனுக்காக போராடிய லி வாங்யாங்கிற்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் பெண்.
2 / 10
ஜப்பானின் டோக்யோ நகரில் நடைபெற்ற த அமேசிங் ஸ்பைடர் மேன் திரைப்படத்துக்கான பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நடிகர் ஆன்ட்ரூ கார்பீல்டு மற்றும் நடிகை எம்மா ஸ்டோன்.
3 / 10
தென் ஆப்ரிக்காவின் மூகெட்சை நகரில் சிவப்பு நிற இலைகளுடன் துளிர்விட்டு நிற்கும் பொய்ன்செய்ட்டியாஸ் மரத்தின் அழகிய தோற்றம்.
4 / 10
யூரோ கோப்பை கால்பந்து தொடரில் ரஷ்யா, போலந்து அணிகள் மோதிய போட்டியை உற்சாகமாக கண்டுகளித்த போலந்து ரசிகை.
5 / 10
பனாமா நாட்டின் தலைநகர் பனாமா சிட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கான மருத்துவமனை ஒன்றுக்கு மருத்துவ உபகரணங்களை பாப் பாடகி ஜெனிபர் லோபஸ் வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய ஜெனிபர்.
6 / 10
அமெரிக்காவின் ஒக்லஹாமா நகரில் நடைபெற்ற மியாமி ஹீட் அணிக்கு எதிரான என்.பி.ஏ. கூடைப்பந்து போட்டியில் வெற்றிக்காக கடுமையாக போராடிய த தண்டர் அணி வீரர் ரசல் வெஸ்ட்ப்ரூக்.
7 / 10
நிகராகுவோ நாட்டின் மனாகுவா நகரில் நடைபெற்ற சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உற்சாகமாக விளையாடிய சிறுமிகள்.
8 / 10
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் ஒயிட் ராக் நகரின் கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய திமிங்கலத்துக்கு அஞ்சலி செலுத்தும் பொது மக்கள்.
9 / 10
உக்ரைன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதையடுத்து ஐஸ்கிரீம் உண்டு வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்ப முயலும் இளம்பெண் மற்றும் சிறுவன்.
10 / 10
தென் கொரியாவின் சியோல் நகரில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட கொரிய ஜனநாயக தெரு வியாபாரிகள் கூட்டமைப்பினர்.
Advertisement