குளோபல் ஷாட் ஆல்பம்:

15-Jun-2012
1 / 11
நல்லெண்ண வருகையாக சீனா வந்துள்ள இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல்கள் சீனாவில் ஷாங்காய் சர்வதேச போர்ட்டில் மக்கள் பார்வைக்காக வைக்கப்படுள்ளது. கடற்பகுதிகளில் நாடுகளுக்கிடையில் நம்பிக்கை ஏற்படும் விதமாக இந்த வருகை அமைந்துள்ளது. இந்திய கடற்படை கப்பல்களை பார்வையிடும் சீனாவின் சுற்றுலா பயனிகள்.
2 / 11
வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளின் கண்காட்சி பாங்காக்கில் நடைபெற்றது. இக்கண்காட்சியில் நான்கு வயதான பூடில் நாய் குட்டி பார்வையாளர்களை கவர்ந்தது.
3 / 11
சீனாவின் மேற்கு கான்சு மாகாணத்தில் ஜியுவான் பூங்காவில் குழந்தைகளை கவரும் வகையில் இடம்பிடித்துள்ள பொம்மைகள்.
4 / 11
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் புனித ஜோதி ஏற்றும் விழாவில் கலந்து கொண்ட அஷ்டக்கா பழங்குடியின பெண்.
5 / 11
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள ஓபரா ஹவுசில் சீனாவின் பாரம்பரிய நடனத்தை வெளிப்படுத்திய கலைஞர்கள்.
6 / 11
அல் கொய்தா தீவிரவாதிகளிடம் இருந்து ஜிஞ்சிபார் நகரை மீட்ட உற்சாகத்தில் ஓமன் ராணுவ பீரங்கி வாகனம்.
7 / 11
அமெரிக்காவின் கொலரடோ மாகாணத்தில் கடந்த சில நாட்கள் காட்டுத் தீ கொளுந்துவிட்டு எரிந்து வருகிறது. இதுவரை 40 ஆயிரம் ஏக்கர் காடுகளை சாம்பலாக்கிய காட்டுத் தீயின் காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்படுகிறது.
8 / 11
இலங்கை கொழும்புவில் உள்ள புத்த கோயிலில் 7 வயதான 'கங்கா' என்ற பெண் யானை தினமும் காலையில் அங்குள்ள புத்தர் சிலைக்கு முன் மண்டியிட்டு வணங்குவதை வழக்கமாக கொண்டுள்ளது.
9 / 11
1950 - 53ம் ஆண்டுகளில் நடைபெற்ற கொரிய யுத்தத்தின் போது மரணமடைந்த வீரர்களுக்கு ராணுவத்தின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
10 / 11
த அமேசிங் ஸ்பைடர்மேன் படம் தொடர்பாக தென் கொரியாவின் சியோலில் நடைபெற்றக் கூட்டத்தில் கலந்து கொண்ட நடிகர் ஆன்ட்ரூ கேரிபீல்டு மற்றும் எம்மா ஸ்டோன்.
11 / 11
ஜகார்ததாவில் நடக்கும் இந்தோனேஷிய ஓபன் பாட்மின்டன் தொடரின் இரண்டாவது சுற்றில் வென்ற இந்தியாவின் செய்னா நேவல், காலிறுதிக்கு முன்னேறினார்.
Advertisement