குளோபல் ஷாட் ஆல்பம்:

16-Jun-2012
1 / 13
அமெரிக்காவின் கொலாராடோ மாகாணத்தில், போர்ட் கோலின்ஸ் பகுதியில், காட்டு தீ கடந்த சிலநாட்களாக தொடர்ந்து எரிகிறது. தீயை அணைக்கும் முயற்சியில், ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
2 / 13
தென் கொரிய தலைநகர் சியோலில் உள்ள போர் நினைவு அருங்காட்சியகம் முன்பு போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் பள்ளிக் குழந்தைகள்.
3 / 13
கடந்த 2000ம் ஆண்டு இரு கொரியா நாடுகளும் இணைவது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானதன் 12வது நினைவு நாளில் வட கொரியாவின் பியாங்யாங் நகரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வட கொரிய மக்கள்.
4 / 13
எகிப்தில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தாகிர் சதுக்கத்தில் பொது மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
5 / 13
சுவீடனின் ஒவிடோ நகரில் போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்து நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது கோஷங்கள் எழுப்பிய தொழிலாளர்கள்
6 / 13
மியான்மரில் ரகின் மாகாணத்தில் கலவரம் ஏற்பட்டுள்ளது. ரகின் மாகாணத்தின் சிட்வே பகுதியில் கலவரக்காரர்கள் குடிசைகளுக்கு தீவைத்தனர். அப்பகுதியை ஆய்வு செய்யும் பாதுகாப்பு படையினர்.
7 / 13
நோபல் பரிசை பெற்றுக்கொள்வதற்காக மியன்மார் சுதந்திர கட்சி தலைவர் ஆங் சான் சூகி நார்வே தலைநகர் ஓஸ்லோ வந்தார். அவரை தனது செல்போனில் படம் பிடிக்க காத்திருக்கும் சூகி ஆதரவாளர்.
8 / 13
விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ள இருக்கும் விண்வெளி வீரர்களான (இடமிருந்து)சீனாவின் லியு யாங், ஜிங் ஹெய்பெங் மற்றும் லியு வாங் ஆகியோர் சீனாவின் கங்சு மாகாணத்தில் பத்திரிகையாளர்களுக்கு போஸ் கொடுத்தனர்.
9 / 13
ஈரோ கால்பந்து தொடரில் உக்ரைனின் கீவ் நகரில் நடந்த இங்கிலாந்து சுவீடன் நாடுகளுக்கு இடையேயான போட்டியை, தங்கள் நாட்டு அணிக்கு ஆதரவு தெரிவிக்க வந்த இங்கிலாந்து ரசிகர்களுடன் பேசும் போலீஸ்காரர்.
10 / 13
பாகிஸ்தானின் பழங்குடியன பகுதிகளில் அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கும், நேடோ படையினர் ஆப்கன் செல்வதற்கு சாலையை திறந்து விட்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்து பெஷாவரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
11 / 13
போரின் மிச்சம்: பெல்ஜியம் வாட்டர்லூ என்ற இடத்தில் நடந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க போரில், மன்னர் நெப்போலியன் தோற்கடிக்கப்பட்டார். அந்த இடத்தில், தொல்லியல் அறிஞர்கள், சமீபத்தில் அகழ்வாராய்ச்சி நடத்திய போது, வீரர் ஒருவரின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது. போரில் அவரது மார்பைத் துளைத்த துப்பாக்கி குண்டு, அப்படியே இருந்தது தான் ஆச்சர்யத்தின் உச்சம்.
12 / 13
இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தாவில், சீனாவில் இருந்து கடத்தி வரப்பட்ட எறும்புத்தின்னிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். எறும்புத்தின்னிகள் காலணிகள் தயாரிக்கவும், மருந்துக்காகவும்கடத்தப்பட்டதாக தெரிகிறது.
13 / 13
அமெரிக்காவின் பிரபல பாடகியும் நடிகையுமான ஜெனிபர் லோபஸ், பனாமா நாட்டில் இசை சுற்றுப் பயணம்மேற்கொண்டுள்ளார். பனாமா சிட்டியில் நடந்த நிகழ்ச்சியில், ரசிகர்களை சூடேற்றும் விதத்தில் ஆடிப் பாடுகிறார்.
Advertisement