குளோபல் ஷாட் ஆல்பம்:

17-Jun-2012
1 / 11
இலங்கையில் பின்னவாலா என்ற இடத்தில், யானைகள் காப்பகம் உள்ளது. ஆதரவற்ற 83 யானைகள், இங்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த காப்பகத்தில் பிறந்த, 15 குட்டி யானைகளுக்கு, சமீபத்தில் பெயர் சூட்டு விழா நடந்தது. இந்த காப்பகத்தைப் பார்க்க வந்த பிரிட்டன் சுற்றுலா பயணி ஒருவர், ஒரு யானைக்கு சூட்டப்பட உள்ள பெயரை, காட்டுகிறார்.
2 / 11
மியான்மரின் ரகின் மாகாணத்தில் ஏற்பட்ட கலவரத்தால் வீடிழந்தவர்கள், சித்வி நகரத்தில் தற்காலிகக் கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
3 / 11
மறைந்த பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் மூன்றாவது நினைவு நாளை முன்னிட்டு தென் கொரிய தலைநகர் சியோல் தெற்கு பகுதியில் உள்ள பசன் நகரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரது ரசிகைகள் கொடுத்த போஸ்.
4 / 11
எகிப்தில் அதிபர் தேர்தல் நேற்று நடந்தது. தலைநகர் கெய்ரோவின் வடக்கு பகுதியில் உள்ள ஜகாஜியாக் நகரில் உள்ள ஓட்டுச்சாவடியில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தனது ஓட்டினை பதிவு செய்யும் முதியவர்.
5 / 11
கொலம்பியாவின் புதிய ராணுவ தளபதியாக ஜெனரல் ஜோஸ் ராபர்டோ லியோன் ரியானோ (இடது) பதவியேற்ற கொண்ட பின்னர், அளிக்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
6 / 11
நேபாளத்தில் உள்ள அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்களை சந்திப்பதற்காக இந்திய அணி கேப்டன் தோனி அங்கு சென்றுள்ளார். காத்மாண்டுவில் உள்ள டிரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் தனது பயணம் குறித்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிக்கும் தோனி.
7 / 11
பாகிஸ்தானில், அப்கன் எல்லையை ஒட்டி அமைந்துள்ள லண்டி கோடல் பகுதியில் குண்டுவெடித்தது. இதில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் அப்பகுதி மக்கள்.
8 / 11
ஜப்பானில் கொலை வழக்கு தொடர்பாக 15 வருட சிறை தண்டனைக்கு பின்னர் நேபாளம் திரும்பிய தனது மகன் கோவிந்த பிரசாத்தை வரவேற்கும் அவரது தாயார்.
9 / 11
சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடந்த பாய்மரப்படகு போட்டியில் கலந்து கொண்ட படகுகள்
10 / 11
அமெரிக்கா, கனடா நாட்டு எல்லையில் உள்ள நயாகரா அருவியை 1800 அடி நீளம் கயிறு கட்டி அதன் மேல்முதன்முதலாக நடந்து நிக் வாலண்டா என்பவர்(வட்டத்திற்குள்) சாதனை படைத்தார்
11 / 11
சீனாவின் முதல் பெண் விண்வெளி வீரர் லியூயங் உட்பட மூன்று விண்வெளி வீரர்களுடன் சீனாவின் வடமேற்கு பாலைவனத்தில் அமைந்துள்ள ஜியுகுவான்விண்வெளி மையத்திலிருந்து "ஷென்சு-9' விண்கலம் விண்ணில் வெற்றிகரமாகபாய்ந்தது. உள்படம்: விண்கலத்தில் சென்ற முதல் சீன பெண் விண்வெளி வீரர்லியூயங்.'
Advertisement