குளோபல் ஷாட் ஆல்பம்:

18-Jun-2012
1 / 10
வழக்கமாக நாயை கண்டால் மிரண்டு ஓடும் பூனைகளுக்கு மத்தியில் கவுதிமாலா சிட்டியிலுள்ள வீடு ஒன்றில் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தும் வகையில் நாய் மீது ஆக்ரோஷத்துடன் பாயும் பூனை.
2 / 10
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற பிரிக்ஸ் டி டையானே குதிரை பந்தய போட்டியை காண வித்தியாசமான சிகையலங்காரத்துடன் வந்த பெண்.
3 / 10
ஜப்பானின் டோக்யோ நகரிலுள்ள கலை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள சிற்பம் ஒன்றின் துளை வழியே வேடிக்கை பார்க்கும் குழந்தை.
4 / 10
கம்போடியாவின் பினோம் பென்ங் நகரில் நடைபெற்ற பெண்களுக்கான அரை மாரத்தான் போட்டியில் இங்கிலாந்தின் லாவ்ரா வாட்சன் மூன்றாவது இடம் பிடித்தார். எல்லை கோட்டருகே வந்த லாவ்ராவின் மகன் சார்லஸ் ஈவான்சும் அவரோடு கைகோர்த்து கொண்டார்.
5 / 10
ஆஸ்திரியாவின் பேட் கேஸ்டின் நகரில் நடைபெற்ற டபிள்யூ.டி.ஏ. தொடரில் பிரான்சின் அலைஸ் கார்னட் சாம்பியன் பட்டம் வென்றார். வெற்றி கோப்பையை முத்தமிடும் அலைஸ் கார்னெட்.
6 / 10
அர்ஜென்டினாவின் கார்டோபோ நகரில் பிரான்ஸ், அர்ஜென்டின ரக்பி அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. போட்டியை ஆர்வத்துடன் கண்டு ரசித்த பிரான்ஸ் ரசிகைகள்.
7 / 10
யூரோ கோப்பை கால்பந்து தொடரில் கிரீஸ், ரஷ்ய அணிகள் மோதிய போட்டிக்கு முன்பாக தொடரின் சின்னமான ஸ்லாவ்கோவை முத்தமிடும் ரஷ்ய ரசிகை,
8 / 10
அமெரிக்காவின் சியட்டில் நகரில் நடைபெற்ற அறிவியல் மாநாட்டில் கலந்து கொண்ட இங்கிலாந்து விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்.
9 / 10
பாகிஸ்தானின் லாகூரில் நேற்று வெயில் 111 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. இதையடுத்து கால்வாய் ஒன்றில் குளித்து வெப்பத்தை போக்கி கொள்ளும் பொதுமக்கள்.
10 / 10
கருக்கலைப்பை தடை செய்யும் துருக்கி அரசின் முடிவை எதிர்த்து தலைநகர் அங்காராவில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.
Advertisement