குளோபல் ஷாட் ஆல்பம்:

19-Jun-2012
1 / 10
சீனாவின் பியூஜியான் மாகாணத்தில் துவங்கியுள்ள பாரம்பரிய கடற்கரை மணற்சிற்ப திருவிழாவில் இடம்பெற்றிருந்த சீனாவின் புகழ்பெற்ற தத்துவமேதையான கன்பியூசியசின் மணற் சிற்பம் அனைவரயும் கவர்ந்தது.
2 / 10
யூரோ கோப்பை கால்பந்து தொடரின், ஸ்பெயின் மற்றும் குரோஷியா அணிகள் மோதிய போட்டியை குதூகலத்துடன் கண்டுகளித்த ஸ்பெயின் அணி ரசிகைகள்.
3 / 10
ஸ்பெயினில் நிலக்கரிக்கான மானியத்தை அரசு ரத்து செய்துள்ள நிலையில், சுரங்கத்தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, சாண்டியாகோ சாலையில், தடைகளை ஏற்படுத்தும் வகையில் அங்கு டயர்களில் நெருப்பை மூட்டி தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் தொழிலாளர்.
4 / 10
இங்கிலாந்தின் வின்ட்சார் நகரின் செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் நடைபெற்ற கார்டர் சேவை நிகழ்ச்சியில் இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் கேத் மிடில்டன் கலந்துகொண்டனர்.
5 / 10
பிலிப்பைன்ஸ் நாட்டில் பெய்த தொடர்மழையால், அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் மணிலாவை அடுத்த மலபோன் பகுதியில் மீட்புப்படையினரின் உதவியுடன் பாதுகாப்பான இடத்திற்கு செல்லும் மக்கள்.
6 / 10
பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில், பெண்கள் உரிமையை வலியுறுத்தி பிரமாண்ட அளவிலான பேரணி நடைபெற்றது.
7 / 10
நேபாள பிரதமர் பாபுராய் பட்டாராயை ராஜினாமா செய்யக் கோரி, நேபாள காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது
8 / 10
பாலஸ்தீனத்தின் பெய்ட் ஹாநவுன் பகுதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் ஒருவர் பலியானார். சம்பவ இடத்தில் ஆய்வு செய்யும் பாலஸ்தீனியர்.
9 / 10
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில், அந்நாட்டு நீதிபதிக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், இந்நாள் அரசியல்வாதியுமான இம்ரான் கான் கலந்து கொண்டார்.
10 / 10
அமெரிக்காவுக்கும் கனடா நாட்டுக்கும் இடையே உலகின் மிகப்பெரிய நயகரா நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சிக்கிடையே கட்டப்பட்ட கம்பியின் மீது 1,800 அடி தூரம் நடந்து சாதனை படைத்துள்ளார் அமெரிக்கரான நிக் வேலென்டா. இதன்மூலம், நயாகரா நீர்வீழ்ச்சியை நடந்து கடந்த முதல்வீரர் என்ற பெருமையை நிக் வேலெண்டா பெறுகிறார்.
Advertisement