குளோபல் ஷாட் ஆல்பம்:

16-ஆக-2017
1 / 8
தென்கொரியாவின் சியோல் நகரில் 5வது சர்வதேச பெண்கள் ஆறுதல் தினம் அனுசரிக்கப்பட்டது. இதற்காக பிரத்யேகமாக தயாரிக்கபட்டு பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த பெண் சிலைகள்.
2 / 8
அமெரிக்கா, வாஷிங்டனை சேர்ந்த ஓதெல்லோ அருகே பரவிய காட்டூத்தீயினால் அருகில் உள்ள மின்கம்பங்களும் பற்றி எரிகிறது.
3 / 8
வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் நடந்த ஆஞ்சிலஸ் நண்பகல் பிரார்த்தனை நிகழ்ச்சியில், பொதுமக்களுக்கு ஆசீர் வழங்கிய போப் பிரான்சிஸ்.
4 / 8
ஸ்பெயின் நாட்டின் பிராட் லியோப்ரகாட்டில் உள்ள பார்சிலோனா விமானநிலையத்தில், பயணிகளுக்கு பாதுகாப்பு கட்டுப்பாடுகள் பலப்படுத்தப்பட்டது.
5 / 8
நேபாளத்தில் பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பிர்குஞ்ஜ் மாவட்டத்தில் வெள்ளத்தில் தத்தளித்து செல்லும் கிராமத்தினர்.
6 / 8
மலேசியா நாட்டு இளவரசி ஆமினா, மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த, நெதர்லாந்து நாட்டு இளைஞரை திருமணம் செய்து கொண்டார்.
7 / 8
அமெரிக்காவுக்கு சொந்தமான குவாம் தீவு மீது தாக்குதல் நடத்தும் திட்டத்தை வடகொரியா ஒத்திவைத்துள்ளது. இதையடுத்து குவாம் கடற்கரையில் நிம்மதியாக ஓய்வெடுத்த சுற்றுலா பயணியர்.
8 / 8
ஏவுகணைகளை ஏவி ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளை வடகொரியா அச்சுறுத்தி வருகிறது. இதைக் கண்டித்தும், கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவ வலியுறுத்தியும் தென்கொரிய தலைநகர் சியோலில் பேரணி நடத்திய இளைஞர்கள்.
Advertisement