குளோபல் ஷாட் ஆல்பம்:

24-Nov-2012
1 / 10
சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள கிண்டர்கார்டன் பள்ளியில், சீனத்தலைவர்களின் போட்டோ பின்னணியில் தனது அன்றாடப் பணியை மேற்கொள்ளும் இளந்தளிர்.
2 / 10
அமெரிக்காவின், டெக்சாஸ் மாகாணத்தில், பனி மூட்டத்தால், ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானவாகனங்கள்.
3 / 10
லண்டன் கேம்பிரிஜின் வொயிட் ஹால் முன் உள்ள மன்னர் ஜார்ஜ் சிலை மீது ஏறிய ஒருவர் நிர்வாணமாக சிலையின்தலைமீதுஅமர்ந்தார்.அவரை காயமின்றி கீழே இறக்கிய ஸ்காட்லாந்து யார்டு போலீசார், "" சிலை மீது ஏறியவர் தனது 30 அல்லது 40 வயதில் ஜார்ஜ் மன்னர் சிலை மீது அமர்வேன் என முன்கூட்டியே நம்பியதன் அடிப்படையில் அவ்வாறு செய்தார்'' என்றனர்.
4 / 10
அமெரிக்காவில் நன்றிதெரிவிக்கும் திருவிழா கொண்டாட்டம் சூடுபிடித்துள்ளது. கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ரோஸ்மெட் நகரில் உள்ள வால்மார்ட் கடையில் தங்களுக்க பிடித்த ஆடைகளை தேர்வு செய்யும் மக்கள்.
5 / 10
இந்தோனேஷியாவில் பெய்த மழையால், நாட்டின் பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. தலைநகர் ஜகார்த்தாவில் தேங்கியுள்ள மழைநீரில் விளையாடி மகிழும் குழந்தைகள்.
6 / 10
தென்கொரிய நாட்டின் இயான்பையாங் தீவில், அணிவகுப்பிற்கான தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள்.
7 / 10
கனடாவின் லேக் லூயிஸ் நகரில் பனிபடர்ந்த வயல்வெளிப் பகுதிகளில் மேய்ச்சலில் ஈடுபட்டுள்ள அரிய வகை மான்.
8 / 10
வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள பிரேசிலியன் பார்முலா ஒன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெராரி டிரைவர் பெலிப் மாசா.
9 / 10
ஐக்கிய அரபு நாடுகளின் துபாய் நகரில் நடைபெற்ற பெண்கள் சின்கிரோனைஸ்டு 10 மீ சாகச நீச்சல் போட்டியில், மலேசிய அணி வெண்கலப் பதக்கம் வென்றது.
10 / 10
சுற்றுலாப் பயணிகளை பெருமளவில் கவரும் பொருட்டு, எகிப்து நாட்டின் லுக்சார் நகரில் வெப்பக் காற்று பலூன்களின் திருவிழா நடைபெற்றது.