குளோபல் ஷாட் ஆல்பம்:

25-Nov-2012
1 / 10
தைவானின் இலான் பகுதியில் 49வது கோல்டன் கார்ஸ் விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான், சீன நடிகை லீ பிங்பிங் கலந்து கொண்டனர்.
2 / 10
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சான்டா கிளாஸ் எனப்படும் கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் ஊர்வலமாக சென்றனர்.
3 / 10
பிரான்சின் கேன்னிஸ் நகரில் நடைபெற்ற பேஷன் நிகழ்ச்சியில் சாக்லேட்களால் வடிவமைக்கப்பட்ட உடையை அணிந்து வந்த மாடல்.
4 / 10
ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் நடைபெற்ற விழாவில் ஆண்டின் சிறந்த தடகள வீரர் விருது ஜமைக்காவின் உசைன் போல்ட்டுக்கு வழங்கப்பட்டது. சர்வதேச தடகள கூட்டமைப்பின் தலைவர் லேமைன் டயாக்கிடம் இருந்து விருது பெறும் போல்ட்.
5 / 10
ஜப்பானின் சென்டாய் நகரில் நடைபெற்ற ஸ்கேட்டிங் கிராண்ட்பிரிக்ஸ் போட்டியில் கலந்து கொண்டு பார்வையாளர்களை அசத்திய அமெரிக்காவின் மிராய் நகசு.
6 / 10
சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெனிபர் லோபஸ்.
7 / 10
தாய்லாந்தின் பாங்ஹாக் நகரில் பிரதமர் யிங்லக் சின்வத்ரா ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தினர். போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர்.
8 / 10
பனாமாசிட்டியில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 10 டன் போதை பொருட்கள் தீ வைத்து அழிக்கப்பட்டன. அழிக்கப்படும் முன்பாக மலை போல் குவித்து வைக்கப்பட்டிருந்த போதை பொருட்கள்.
9 / 10
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது குழந்தையுடன் கலந்து கொண்ட நடிகை ஹாலே பெர்ரி.
10 / 10
அமெரிக்காவை "சாண்டி' புயல் தாக்கியதால், நியூயார்க் மற்றும் நியூஜெர்சி மாகாணங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. மூன்று வாரங்களுக்கு மேலாகியும், இன்னும் நியூயார்க் நகரில், நிலைமை சீராகவில்லை.