குளோபல் ஷாட் ஆல்பம்:

04-Dec-2012
1 / 10
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஆஸ்திரேலிய அணி முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், நேற்று ஓய்வு பெற்றார். பெர்த் டெஸ்டின் இறுதியில், தனது மனைவி ரியான்னா மற்றும் குழந்தைகள் மடிசே மற்றும் எமியுடன் போட்டோவிற்கு போஸ் கொடுத்தார்.
2 / 10
பிரேசில் மற்றும் சிலி நாடுகளுக்கு இசை நிகழ்ச்சிக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாப் இசை உலகின் அரசியாக கருதப்படும் மடோனாவின் இசை நிகழ்ச்சி, பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்றது.
3 / 10
அமெரிக்காவில் விரைவில் நடைபெற உள்ள மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டிக்காக, லாஸ் வேகாஸ் நகரில் அதற்கு தன்னை தயார்படுத்திக்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இந்தியா சார்பில் கலந்து கொண்டுள்ள ஷில்பா சிங்.
4 / 10
அமெரிக்கா, கலிபோர்னியா மாகாணத்தில் கடும் மழை பெய்து வருகிறது. சூறாவளியால், ஓக் மரங்கள் சாய்ந்ததில் கார்கள் நசுங்கிக் கிடக்கின்றன.
5 / 10
அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற மிஸ் பென்சில்வேனியா அழகிப் போட்டியில் மகுடம் சூடப்பட்ட ஜெசிகா பில்லிங்ஸ், தான் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மகிழ்ச்சியை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்கிறார்.
6 / 10
அமெரிக்காவில் சாண்டி புயலின் தாக்கம் குறைந்துள்ள நிலையில், அங்கு மீண்டும் புயல் சின்னம் உருவாகி மக்களை அச்சுறுத்தி வருகிறது. புயலின் காரணமாக பெய்த தொடர்மழையால், கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சாக்ரோமெண்டோ நகரில் மழைநீரில் நீந்திச் செல்லும் கார்.
7 / 10
சுவீடன் நாட்டின் ஆஸ்டர்சன்ட்டிலிருந்து ஸ்டோர்லியனை நோக்கி சென்ற ரயில் ஸ்டோட் ரயில் ஸ்டேசன் அருகே தடம்புரண்டது. மீட்புநடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ரயில்வே ஊழியர்கள்.
8 / 10
பிரான்ஸ் நாட்டில், நான்கு லட்சம் பேர், சட்ட விரோதமாக தங்கியுள்ளனர். குடியேற்ற துறையின் சலுகையை பயன்படுத்தி, மேலும் சிலகாலம் தங்கியிருப்பதற்காக, உரிய ஆவணங்களுடன், போபிக்னி நகரில், குடியேற்ற அலுவலக, வாசலில் காத்திருக்கின்றனர்.
9 / 10
இந்தோனேசியா பாலி மிருக காட்சி சாலையில், அரிதான வெண்நிற வால் இல்லா குரங்குகள்உள்ளன. காடுகள் அழிப்பால், இவற்றின் பாரம்பரிய வசிப்பிடங்களில் 4 சதவீதம் மட்டுமே மிஞ்சியுள்ளது.
10 / 10
சில நாட்களுக்கு முன் இங்கிலாந்து கவுன்டி பகுதிகளில் மழை வெளுத்துக்கட்டி தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்தது. தற்போது இப்பகுதிகள் பனிப் பொழிவால் உறைந்து கிடக்கின்றன. பசுமை சூழ்ந்த பகுதிகள் அந்நிறத்தை துறந்து, வெண்மை உடை அணிந்து கொண்டுள்ளனவோ.
Advertisement