குளோபல் ஷாட் ஆல்பம்:

05-Dec-2012
1 / 10
ஈரான் கைப்பற்றியுள்ள அமெரிக்காவின் ஆளில்லாத உளவு விமானம்.
2 / 10
பிலிப்பைன்ஸ் நாட்டில்,போபா என்ற சூறாவளி புயல் வீசியது. புயல் மற்றும் மழையால், 50 பேர் பலியாகியுள்ளனர். மின்டானோவ் என்ற இடத்தில் சேதமடைந்த வீடுகளிலிருந்து, பொருட்களை சேகரிக்கின்றனர், இப்பகுதி மக்கள்.
3 / 10
பிரான்ஸ் நாட்டின் மார்சீலி நகரில், ஒதுக்கு புறமாக வாழ்க்கை நடத்தும் ரோமா பழங்குடியினர்.
4 / 10
மலேசியா கோலாலம்பூரில் ஷா ஆலம் எனும் பகுதியில் உள்ள டிரிக் கலை அருங்காட்சியகத்தில் 3டி தொழில்நுட்ப கலைவண்ணத்திற்கு போஸ் தந்த பார்வையாளர்கள்.
5 / 10
கொழும்புவில் இலங்க‌ை தலைமை நீதிபதி ஷிரானி பண்டாராநாயக்காவை பார்லிமென்ட் குழுவின் முன் 2வது முறை ஆஜர்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள்.
6 / 10
கொழும்பில் நீதிமன்ற வளாகம் செல்லும் முன், இலங்கை தலைமை நீதிபதிக்கு புத்ததுறவிகள் மற்றும் மதகுருமார்கள் ஆகியோர் ஆசீர்வதித்தனர்.
7 / 10
சிரியா, அலிப்போ நகரில் அந்நாட்டு ராணுவப்படைகளுடன் மோதுவதற்கு துப்பாக்கியை குறிபார்க்கும் அந்நாட்டு எதிர்ப்பாளர்களில் ஒருவர்.
8 / 10
வங்கதேசத்தில் நடந்த நாடு தழுவிய போராட்டத்தில் பற்றி ‌எரியும் டயர்கள‌ை அணைக்கும் அந்நாட்டு போலீஸ்காரர்கள்.
9 / 10
பிலிப்பைன்ஸ் நாட்டில், வீசிய போபா என்ற சூறாவளி புயலால்,கோம்போஸ்டெல்லாவில் உள்ள சாலையில் தென்னை மரங்கள் சாய்ந்து கிடக்கின்றன. அதனை அப்புறப்படுத்திய அந்நாட்டு ‌போலீஸ்காரர்கள்.
10 / 10
அமெரிக்கா, கலிபோர்னியாவில் உள்ள லாபாயெட்டெ கிரீக்கிலிருந்து சாலைகள் வெள்ளத்தால் சேதமடைந்த சாலையை பசிபிக் பொது பொறியியல் அமைப்பு தொழிலாளி சரி செய்கிறார்.
Advertisement