குளோபல் ஷாட் ஆல்பம்:

19-Dec-2012
1 / 10
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னும் பிரான்சின் நைஸ் நகரின் மசினா பகுதியிலுள்ள பூங்கா.
2 / 10
கத்தார் நாட்டின் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தோகா நகரில், ஒட்டகப்படை போலீசாரின் அணிவகுப்பு நடந்தது.
3 / 10
அமெரிக்காவின் மிசிசிப்பி நதியின் ராக்ஸ் கால்வாய் பகுதியாக கப்பல் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. ஆற்றில் போதிய நீர் இல்லாததையடுத்து சில இடங்களில் நதி ஆழப்படுத்தப்பட்டு போக்குவரத்து தொடரப்பட்டது.
4 / 10
வங்கதேசம் தலைநகர் தாகாவில் நடைபெற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி கட்சிகள்.
5 / 10
ஜப்பானில் கடும் பனி பொழிவு நிலவி வருகிறது. காலை சூரியன் உதயமாகி சில மணி நேரத்துக்கு பின்னரும் பனி மூட்டமாக காணப்படும் டோக்யோ நகரின் காட்சி.
6 / 10
வரும் 21ம் தேதி உலக அழிய போவதாக மாயன் காலண்டரில் கூறப்படுவது பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் மாயன்கள் வாழ்ந்த மெக்சிகோவின் கோபா பகுதியில் சுற்றுலா பயணிகள் குவியத் தொடங்கியுள்ளனர்.
7 / 10
பென்சன் தொகையை ரத்து செய்த ஸ்பெயின் அரசை கண்டித்து பாம்லோனா நகரில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
8 / 10
கனடாவின் கியூபெக் நகரிலுள்ள தேசிய நெடுஞ்சாலை 40 கடும் பனி மூட்டம் காரணமாக 27 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று உரசி விபத்தில் சிக்கின.
9 / 10
இத்தாலியின் பலர்மோ நகரில் இரண்டு மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு படையினர்.
10 / 10
பிஜியின் நடடோலி பகுதியில் 200 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்றுடன் மழை பெய்தது. புயல் காற்றை எதிர்கொள்ள திணறும் தென்னை மரங்கள்.
Advertisement