குளோபல் ஷாட் ஆல்பம்:

24-Dec-2012
1 / 10
வங்க தேசத்தில் உள்ள நாராயண் கன்ஞ் என்னுமிடத்தில் உள்ள சாயத்தொழிற்சாலையில் துணியை உலரவைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளான் சிறுவன் ஒருவன். வங்க தேசத்தில் சுமார் 3.2 மில்லியன் குழந்தை தொழிலாளர் பணிபுரிந்து வருகின்றதாக கணக்கெடுப்பு ஒன்று கூறுகிறது.
2 / 10
மியான்மர் நாட்டில் யாங்கோன் நகரில் நடந்த பேஷன் ஷோ விழாவில் உள்ளூர் ஆடை வடிவமைப்பாளர்கள் உருவாக்கிய ஆடைகளை அணிந்து வந்தனர் மாடல் அழகிகள்.
3 / 10
தென் அமெரிக்காவின், அர்ஜென்டினா மற்றும் சிலி நாடுகளுக்கு இடையே உள்ள கோப்பாஹியூ எரிமலை, சீற்றமடைந்து நெருப்பு குழம்புடன், திரளான சாம்பலை உமிழ்ந்து வருகிறது. இதனால், இப்பகுதியில் மக்கள், வெளியேறும் படி, எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
4 / 10
ஐரோப்பாவில் உள்ள சிறிய நாடான மொனாக்கோவில், கிறிஸ்துமசையொட்டி, கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்தவர்கள், கடலில் புனித நீராடினர்.
5 / 10
சீனாவின் ஹெனான் மாகாணத்தில் நடைபெற்று வரும் சர்வதேசபலூன் திருவிழாவில் குழந்தைகள் மகிழ்கின்றன.
6 / 10
ஆப்கான் தலைநகர் காபூலில் சந்தையில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்ச மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாயின.
7 / 10
சீன தலைநகர் பீஜிங் முதல் பொருளாதார மைய நகரமான குவாங்கோ நகருக்கும் இடையே மணிக்கு 300 கி.மீ முதல் 350 கி.மீ தூரம் வரை செல்லக்கூடி புல்லட் ரயிலை வரும் 26-ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது.
8 / 10
பெரு நாட்டில் செல்லப்பிராணிகளுக்கு என துவக்கப்பட்டுள்ள துணிக்கடையில் தங்களின் செல்லப்பிராணிகளுக்கான ஆடையை தேர்வு செய்கின்றனர். அந்நாட்டு பெண்கள்.
9 / 10
அமெரிக்காவின் கொலம்பஸ் பகுதியில் உள்ள உயிரியல்பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த கொரில்லா வகை குரங்கு தனது 56-வது பிறந்த நாளை கொண்டாடியது. இந்த உயிரியல் பூங்கா 1956-ம் ஆண்டு திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
10 / 10
உலகம் முழுவதும் கிறிஸ்மஸ் கொண்டாடப்பட்டு வரும் வேளையில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பல அடுக்குமாடி கட்டடத்தை சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் கிறிஸ்மஸ் தாத்தா வேடமணிந்து பணிபுரிகின்றனர்
Advertisement