குளோபல் ஷாட் ஆல்பம்:

25-Dec-2012
1 / 10
பாலஸ்தீனத்தில், இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள பெத்லஹேம் நகரில், கிறிஸ்துமசையொட்டி, பாதிரியார்களின் ஊர்வலம் நடந்தது. பெத்லஹேம் நகரில், ஏசுநாதர் பிறந்ததாக நம்பப்படுகிறது.
2 / 10
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, ஹாங்காங்கில் உள்ள வணிக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட பொம்மை முன் போட்டோ எடுத்துக்கொள்ளும் மக்கள்.
3 / 10
அர்ஜென்டினா மற்றும் சிலி நாடுகளின் எல்லைகளுக்கு இடையேயான நியூகின் மாகாணத்தில் உள்ள கோபாஹேக் எரிமலை தற்போது சீறத் துவங்கியுள்ளது. இதன்காரணமாக, அப்பகுதியில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
4 / 10
புத்தாண்டு விரைவில் பிறக்க உள்ளதையொட்டி, பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க்கில் நடைபெற உள்ள புத்தாண்டு கொண்டாட்ட அணிவகுப்பிற்காக பயிற்சியில் ஈடுபட்ட மக்கள்.
5 / 10
இந்தோனேசியாவில், பலத்த மழை பெய்வதால், தலைநகர் ஜகார்த்தாவின் தெருக்களை, வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளத்தில் சிரமப்பட்டு செல்கின்றனர் அப்பகுதி மக்கள்.
6 / 10
ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் வணிக வளாக நகரமான ஜின்ஜா பகுதியில், கிறிஸ்துமஸ் தாத்தா உடையணிந்து ஷாப்பிங்கில் ஈடுபட்டுள்ள மக்கள்.
7 / 10
ஜெர்மனியில் இதமான காலநிலை நிலவிவரும் நிலையில், பெர்லின் கதீட்ரல் தேவாலயத்தின் முன் கூடித்திரியும் பறவைகள்.
8 / 10
ஹெய்த்தி நாட்டின் போர்ட் ஆப் பிரின்ஸ் நகரத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தையொட்டி, குதூகலமாக விளையாடி மகிழும் குழந்தைகள்.
9 / 10
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மார்க்கெட் பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 500க்கும் மேற்பட்ட கடைகள் தீக்கிரையாயின. தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வாகனங்கள்.
10 / 10
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்டியுள்ள நிலையில், பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள டிவிசோரியா பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. அக்கட்டிடத்தில் இருந்தோர் பரபரப்புடன் வெளியேறிய காட்சி.
Advertisement