குளோபல் ஷாட் ஆல்பம்:

27-Dec-2012
1 / 10
அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் சாண்டி புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் சீரமைப்பு பணிகள் மந்தமாக நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் தன்னார்வ அமைப்பு ஒன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியது.
2 / 10
பிரான்சின் போர்டியாக்ஸ் நகரில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பங்கேற்ற மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக மருந்து பொருட்களை வழங்கினர்.
3 / 10
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்று அணிவகுத்த பாய்மர படகுகள்.
4 / 10
தாய்லாந்தின் பாங்ஹாங் நகரில் நடைபெற உள்ள சுவர்ணபூமி டென்னிஸ் தொடரில் பங்கேற்க வந்துள்ள நம்பர் -1 டென்னிஸ் வீராங்கனையான பெலாரசின் விக்டோரியா அசரன்காவை வரவேற்கும் அந்நாட்டு டென்னிஸ் சங்க தலைவர் சுவத் லிப்டோபலோப்.
5 / 10
மலேசியாவின் கேலன்டன் பகுதியில் கன மழை பெய்து வருகிறது. மழை நீரில் மூழ்கியுள்ள சாலைகளில் விளையாடும் சிறுவர்கள்.
6 / 10
நைஜீரியாவின் லாகோஸ் நகரில் உள்ள சேமிப்பு கிடங்கில் தீ பிடித்ததால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. இச்சம்பவத்தில் பலியானவர்கள், காயமடைந்தவர்கள் குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.
7 / 10
ரஷ்ய குழந்தைகள் அமெரிக்கா தத்தெடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்ய பார்லிமென்டில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை கண்டித்து மாஸ்கோவில் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
8 / 10
மெல்போர்ன் டெஸ்டில் இலங்கை வீரர் ஜெயவர்த்தனேவின் விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும் ஆஸ்திரேலிய வீரர் பீட்டர் சிடில்.
9 / 10
ஸ்பெயினின் மாட்ரிட் பகுதியில் 11 டன் மதிப்பிலான போதை பொருட்களை போலீஸார் கைபற்றினர். கைப்பற்றப்பட்ட போதை பொருட்கள் காவல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
10 / 10
கொலம்பியாவின் கேளி நகரில் பாரம்பரியமிக்க சல்சோடிரோமா நடனமாட தயாராகும் சிறுமிகள்.
Advertisement