குளோபல் ஷாட் ஆல்பம்:

29-Dec-2012
1 / 10
பனி மூடிய சீனாவின் ஜிலின் பகுதியின் அழகிய தோற்றம்.
2 / 10
ஜெர்மனியின் சிவ்வர்ஸ்டர்ப் நகரில் மின் 'ஸ்பார்க்லர்சின்' உதவியுடன் 2013ம் ஆண்டை வரவேற்கும் பொது மக்கள்.
3 / 10
ஜெர்மனியின் ஹாம்பர்க் நகர் பூங்காவில் மரக் கிளையில் அமர்ந்தபடி இயற்கை அன்னையின் எழிலை மேலும் அதிகரிக்கும் டிட் பறவை.
4 / 10
கென்யாவின் நைய்ரோபியில் கன மழை பெய்து வருகிறது. போதிய வடிகால் வசதி இல்லாத்தால் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
5 / 10
நிகராகுவே நாட்டிலுள்ள சான் கிறிஸ்டோபல் எரிமலை கடந்த சில நாட்களாக புகையை கக்கி வருகிறது. இந்த எரிமலை விரைவில் வெடித்த குழம்புகளை கக்கும் என கூறப்படுவதால் அப்பகுதியிலுள்ள மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.
6 / 10
அமெரிக்காவின் மிசிக்கன் பகுதியில் கடும் பனி பொழிவு பெய்து வருகிறது. இதன் காரணமாக வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
7 / 10
ஈகுவேடாரின் ஜோ அகியுனா நகரில் பஸ் ஒன்று சாலையில் இருந்து உருண்டு பள்ளத்தில் விழுந்தது. 13 பேரை பலி கொண்ட இச்சம்பவத்தில் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு படையினர்.
8 / 10
அமெரிக்காவின் நியூயார்க்கிற்கு அருகிலுள்ள ரிகாவே கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய 60 அடி நீளமுள்ள திமிங்கலம்.
9 / 10
தென் கொரியாவின் அன்சன் நகரில் நடைபெற்ற குளிர்கால ராணுவ பயிற்சி முகாமில் பங்கேற்ற பள்ளி மாணவர்கள்.
10 / 10
பிரேசிலின் பிரேசிலியா நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அதிபர் டில்மா ரூசெப்.
Advertisement